(எம்.மனோசித்ரா)

ஹெரோயின் போதைப்பொருள் கடத்திய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குழந்தையுடன் குறித்த பெண் மோட்டார் சைக்கிளில் சுமார் 10 இலட்சத்திற்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளை கடத்தியுள்ளார்.

மிகவும் சுட்சுமமான முறையில் மூன்று கிராமிற்கு அதிகமான எடையுடைய ஹெரோயின் 200 பக்கட்கள் மற்றும் 59 கிராம் எடையுடைய 15 சிறிய பொதிகள் உள்ளிட்ட சில பொருட்களை இதன் போது பொலிசார் மீட்டுள்ளனர்.

சிறைவைக்கப்பட்டுள்ள முக்கிய இரு போதைப்பொருள் கடத்தல் காரர்களின் போதைப்பொருளினையே குறித்த பெண் கடத்தியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.

சந்தேக நபர் குறித்து பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.