(எம்.நியூட்டன்)
இந்திய முறையிலான ஆட்சிதான் இலங்கைக்கும் சரி இதனையே நான் நீண்டகாலமாக கூறிவருகின்றேன். இன்றைய ஜனாதிபதியும் அவ்வாறான ஒரு ஆட்சிமுறை தான் அமையும் என்று கூறியுள்ளார். எனவே இத்தகைய ஆட்சியை அமைப்பதற்கு எமக்கும் ஒரு சந்தர்ப்பம் தரவேண்டும் என தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார்.
விடுதலைக்கூட்டணியின் செயலாளர் நாயகத்தின் 87 ஆவது பிறந்ததினமும் தமிழர் விடுதலைக்கூட்டணியின் இணையத்தள அங்குரார்ப் பணமும் இன்று கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தமிழ் மக்களை பாதுகாக்கவேண்டியபொறுப்புஉங்கள் அனைவருக்கும் உள்ளது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களை படுகுழிக்குள் தள்ளி விட்டது 2004 ஆம் ஆண்டு 22 பேர் பாராளுமன்றத்தில் இருந்தபோதே மக்களுக்கான பிரச்சினையை தீர்த்து வைத்திருக்கலாம் சர்வதேச ரீதியிலான சிறந்த சந்தர்ப்பம்அமைந்திருந்தது அதனை முறையாகப் பயன்படுத்தி இருந்தால் தமிழீழ விடுதலைப்புலிகள் உட்பட தமிழ் மக்களை பாதுகாத்திருக்கலாம்.
அவ்வாறு செய்யாதவர்கள் இன்றும் தாங்கள் தான் தீர்வைக் காணுவோம் என்று கூச்சல்போடுகின்றார்க்ள இதுவரை காலத்திலும் சமஷ்டி ஒற்றை ஆட்சி எனக் கதை விட்டவர்கள் என்னத்தைச் செய்தார்கள். சமஷ்டி ஆட்சியோ ஒற்றை ஆட்சியோ இந்தநாட்டுக்கச் சரிவராது நான் நீண்டகாலமாகவே இந்தியாவிலுள்ள மாநிலங்களுக்குள்ள ஆட்சி முறைதான் இலங்கைக்கும் சரி வரும் என கூறிவந்துள்ளேன்.முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபச்ச ஆட்சியில் இருந்தபோது இதைப் பற்றிக் கலந்துரையாடியுள்ளேன். இன்றைய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவும் இந்திய முறையிலான ஆட்சி முறையிலான தீர்வுதான் அமையும் என்றகருத்தைக்கூறியுள்ளார்.
ஆகவே தமிழ் மக்கள் எமக்கு ஒரு சந்தர்ப்பத்தை தரவேண்டும் என்றே நான் இவ் வேளையில் கோரிக்கை வைக்கின்றேன். வடக்கு மாகாகணத்தில் முன்னாள் முதலமைச்சர் நீதி அரசர் விக்கினேஸ்வரன் ஜனநாயகத்தை குழிதோண்டியவர்களுடன் கூட்டுச் சேர்ந்துகொண்டு பணத்தைக் கேட்கின்றார். இவருக்கு வேறு வேலை இல்லையா மக்கள் விழிப்புடன் இருக்கவேண்டும்
நீதியரசர் விக்கினேஸ்வரனை எம்முடன் இணையுமாறு கேட்டுள்ளேன் எமது தலைமைப்பொறுப்பை தருவதாகக் கூறியுள்ளேன். இன்றும் அவருக்கு இதற்கான அழைப்பைவிடுக்கின்றேன். தமிழ்த் தலைவர்களினால் உருவாக்கப்பட்ட எமது கட்சியின் பெறுப்பை ஏற்று அவர்கள் பாதையில் செல்வதற்கே இதற்கானஅழைப்பை விடுக்கின்றேன். எமது மக்களைப் பாதுகாக்கின்றபொறுப்பு எல்லோருக்குமே இருக்கின்றது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM