இலங்கையில் Jaguar ரககார்களை இறக்குமதி செய்யும் ரீஜென்ஸி Auto மொபைல்ஸ் (பிரைவட்) லிமிட்டெட், புத்தம் புதியரக Jaguar XEகார்களை இலங்கையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த அறிமுக நிகழ்வு கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்றது. Jaguar ரககார்கள் தெரிவுகளில் நான்காவது மாதிரியாக அமைந்துள்ள புத்தம் புதிய XE தெரிவுகள், ஸ்போர்ட்ஸ் சலோன் ரக கார்களில் புதிய புரட்சியாக அமைந்துள்ளதுடன், சாரதியின் நன் மதிப்பை வென்ற காராகவும் அமைந்துள்ளது. இலகு எடைகொண்டதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், அழகிய கண்கவர் தோற்றம், சொகுசான உள்ளக கட்டமைப்பு மற்றும் சிறந்த பயண அனுபவம் ஆகியன கம்பனியின் ஸ்தாபகர் சேர் வில்லியம் லியொன் இன் சிந்தனைக்கமைய அமைந்துள்ளது. “நாம் தயாரிக்கும் பொருட்களில் உயிரூட்டமாக அமைந்த தயாரிப்பாக கார்கள் அமைந்துள்ளன”என்பது அவரின் சிந்தனையாகும்.

ரீஜென்ஸி Auto மொபைல்ஸ் (பிரைவட்) லிமிட்டெட் நிறுவனத்தின் தலைவர் ஆர்தர் சேனநாயக்க கருத்து தெரிவிக்கையில், “Jaguar கார்கள் அவற்றின் சமநிலையான ஓட்டம் மற்றும் இலகுவான கையாளல் மற்றும் சொகுசான அனுபவம் ஆகியவற்றுக்காக புகழ் பெற்றுள்ளன. புதிய Jaguar XEஅறிமுகத்துடன், இலங்கைச் சந்தையில் மேம்படுத்தப்பட்ட மிகப் பிந்திய இலகு எடைகொண்ட அலுமினிய நிர்மாணத்தை வழங்குவதையிட்டு நாம் மிகவும் பெருமையடைகிறோம்”என்றார்.

XE என்பது நான்கு சிலின்டர் பெற்றோல் என்ஜின்களால் வலுவூட்டப்பட்டுள்ளது. பின்புற சர்க்கரத்தினால் வலுவூட்டப்படும் இந்த கார், உயர் வினைத்திறன் கொண்டுள்ளதுடன்,170g/km, CO2 to 250km/h  திறனையும் கொண்டுள்ளது. நேரடி இன்ஜெக்ஷன், மாறுபடும் வால்வு டைமிங், தூய்மையான, அமைதியான கொம்பஷ்டன் மற்றும் சிறந்த அழுத்தமீட்சி ஆகிய அனுகூலங்களை கொண்ட என்ஜினை உள்ளடங்கியுள்ளது. மிருதுவான 8-speed Automatic Transmissions மூலமாக பின்புற சில்லுகளுக்கு வலு செலுத்தப்படுகிறது.

EX இல் Turbo Charged, Direct-Injection, 2.0-litre Four-Cylinder Unit  அடங்கியுள்ளது. இது Jaguar ஓகு மற்றும் ஓது சலோன்களில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தன. மேலும் புதிய XE இல் காணப்படும் Light Weight Power Plant மூலமாக 200 குதிரை வலுசக்தி வழங்கப்படுவதுடன், 7.7 செக்கன்களில்0-100km/h எனும் வேகத்தை எய்த உதவியாக அமைந்துள்ளது. 

புதிய XEஐIngeniumஎனும் புதிய என்ஜின் குடும்பத்துடன் Jaguar அறிமுகம் செய்துள்ளது. இந்த மேம்படுத்தப்பட்ட முன்மாதிரியான அலங்காரம் மற்றும் பெற்றோல் விரயத்தை தவிர்த்து உயர் வினைத்திறன், சிக்கனம் மற்றும் பயன்பாட்டை வழங்குவதை உறுதி செய்கின்றன.

உள்ளக கெபின் மூலமாக உயர்ந்தளவு சௌகர்யம் மற்றும் இடவசதி ஆகியன வழங்கப்படுகின்றன. பிரத்தியேகமான மூலப்பொருட்கள் மற்றும் வேலைப்பாடுகள் போன்றன Jaguar அலங்கார வடிவமைப்புடன் ஒன்றிணைந்து இதை இந்த வகுப்பில் காணப்படும் மிகச்சிறந்த உள்ளககட்டமைப்பாக திகழச் செய்துள்ளன. Jaguar இன் புதிய புத்தாக்கமான 8-அங்குல தொடுதிரை மூலமாகவேகமான, சர்வாம்சங்களும் உள்ளடங்கிய செயற்பாடுகள் உறுதிசெய்யப்பட்டுள்ளன.

XE இல் மிகவும் மேம்படுத்தப்பட்ட சாரதி உதவி கட்டமைப்புகள் காணப்படுகின்றன.All Surface Progress Control (ASPC)  என்பது பலதசாப்த கால Jaguar Land Rover அனுபவத்தைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதுடன், சிலநொடிப் பொழுதுகளில் இலத்திரனியல் ரீதியாக உராய்வை பதியக்கூடியது. குறைந்த இழுவை கொண்ட மேற்பரப்புகளில் மிகவும் பொருத்தமான தெரிவாக அமைந்திருக்கும். Laser projection தொழில்நுட்பத்தின் மூலமாக XE இன் Head-Up Display (HUD)  ஐ கூர்மையான, உயர் பிரகாசம் நிறைந்த வர்ண கிராஃபிக்ஸ்களை தோற்றுவிக்கக்கூடியது. (வாகனவேகம் மற்றும் வழிகாட்டல்) இதன் மூலமாகநேரடி சூரியஒளியில் கூட மிகவும் தெளிவுத்தன்மையை தக்கவைத்துக் கொள்ளும் திறனை கொண்டுள்ளது.

XE என்பது அதிகளவு Aerodynamic திறன் கொண்ட Jaguar சலோன் ரககாராகும். இலக்ரிக் பவர் ஸ்டியரிங் கொண்ட முதலாவது Jaguar கார் ரகம் என்பதுடன், சிறந்த துலங்கலை வெளிப்படுத்தும் வகையில் டியுன் செய்யப்பட்டுள்ளது. குறைந்தளவு வலுப்பயன்பாட்டை கொண்டுள்ளது. உரிமையாளருக்கு குறைந்த செலவீனத்தை வழங்கும் வகையில் XE அமைந்துள்ளது. சகல Jaguar மாதிரிகளை விடவும் சூழலுக்கு மிகவும் நட்புறவான திறன்களை கொண்டுள்ளன. XE தற்போது Jaguar இன் சலோன் கார் தெரிவை பூர்த்திசெய்யும் வகையில் அமைந்துள்ளது.