அரசாங்க வைத்தியசாலைகளில் சிகிச்சை (கிளினிக்) மருந்து மற்றும் அரச ஒசுசல மூலம் பெற்றுக்கொள்ளப்படும் மருந்து வகைகளின் உரிமைமயாளர்களுக்கு தபால் திணைக்கள அலுவலக பணியாளர் மூலம் விநியோகிக்கும் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன அறிவித்துள்ளார்.
கொரோனா வைரசு தொற்றுக்கு மத்தியில் அத்தியாவசிய சேவைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி செயலணிக்குழுவின் கோரிக்கையின் அடிப்படையில் அரசாங்க வைத்தியசாலைகளில் சிகிச்சை (கிளினிக்) மருந்து மற்றும் அரச ஒசுசலவின் மூலம் பெற்றுக்கொள்ளப்படும் மருந்து வகைகளின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் பணி தபால் திணைக்களக்தினால் பொறுப்பேற்கப்பட்டிருந்ததுடன், இந்த பணியை எமது பணியாளர் சபையினால் செயல்திறனுடனும் நம்பிக்கையுடனும் நிறைவேற்றப்பட்டதுடன் அதற்காக அர்ப்பணித்த தபால் திணைக்களத்தின் அனைத்து ஊழியர் சபைக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.
இதுவரையில் அரசாங்கத்தினால் கொரோனா தொற்று பரவுவதை கட்டுப்படுத்தி பொது மக்களின் வாழ்க்கையை வழமை நிலைமைக்கு கொண்டுவரப்பட்டுள்ள பின்னணியில் தபால் திணைக்களம் வழமை நிலைக்கு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக தபால் திணைக்களத்தின் வழமையான கடமைகள் மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ளவுள்ள தேர்தல் பணிகளுக்காக முக்கியத்தவம் வழங்க வேண்டும் என்பதினால் தொடர்ந்தும் அரசாங்க வைத்தியசாலைகளில் கிளினிக் மருந்து மற்றும் அரச ஒசுசல மூலம் பெற்றுக்கொள்ளப்படும் மருந்து வகைகளை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் பணியை நிறைவேற்றுவதற்கு தபால் திணைக்கள பணியாளர் சபையினருக்கு சிரமம் என்பதினால் இந்த நடவடிக்கையை சுகாதார பிரிவின் உடன்பாட்டிற்கு அமைய 2020.06.15 திகதி முதல் நிறுத்தப்படுவதை அறிவிக்கின்றோம்.
மேலும் இந்த மருந்து வகைகளை விநியோகிக்கும் பணியை எதிர்காலத்திலும் மேற்கொள்ளுமாறு சுகாதார பிரிவு மற்றும் நுகர்வோரான பொது மக்களினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருப்பதாகவும், இந்த பணிகளை நிறைவேற்றுவதற்காக முறையான வேலைத்திட்டமொன்றை வகுத்து எதிர்காலத்தில் அது தொடர்பாக அறிவிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதையும் அறிவிக்கின்றோம்.
மேற்குறிப்பிட்ட ஊடக அறிக்கையை அனைத்து ஊடகங்கள் மூலம் பிரச்சாரம் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுளமாறு தயவுடன் கேட்டுக்கொள்கின்றோம். என்று தபால் மா அதிபர் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM