கொரோனா தொற்று பரவல் காரணமாக பாகிஸ்தானில் சிக்கித்தவித்த 129 பேர் இன்று அதிகாலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸின் விசேட விமானத்தின் மூலம் குறித்த 129 பேரும் நாடு திரும்பியுள்ளனர்.

நாடு திரும்பிய அனைவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அனுப்பிவைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.