அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எதிர்வரும் திங்கட்கிழமை ஏற்பாடு செய்துள்ள பணிப்பகிஷ்கரிப்பிற்கு சுகாதாரத்துறையின் பல  தொழிற்சங்கங்கள் ஆதரவு தரவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் நவின் டி சொய்சா தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

குறித்த பணிப்பகிஷ்கரிப்பில் அரசாங்க பல் அறுவை சிகிச்சை சங்கம், இலங்கை ஆயுர்வேத வைத்திய சங்கம் ஆகியன இணைந்துக்கொள்ள உள்ளன.

அதுமாத்திரமின்றி அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கம் உட்பட பல சுகாதாரத்துறை தொழிற்ச்சங்கங்கள் தாம் ஏற்பாடு செய்துள்ள பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கைக்கு ஆதரவு தரவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

எதிர்வரும் திங்கட்கிழமை காலை 8.00 மணியிலிருந்து நண்பகல் 12.00 மணிவரை பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட போவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.