அழிக்கப்படும் கண்டல் தாவரங்கள் : வேலியே பயிரை மேய்வதற்கு ஒப்பானது

13 Jun, 2020 | 10:31 PM
image

மன்னார் மாவட்டத்திலும் 'சுயநலமான மனித நடவடிக்கைகளால்' அழிக்கப்பட்டு வருகிறது. உலகில் மனிதனின் நடவடிக்கைகளினால் இயற்கை சூழல் பல்வேறு விதமான  ஆபத்துக்களை எதிர்கொண்டு வருகின்றது.

 

மனிதன் இயற்கைக்கு எதிராக முன்னெடுக்கும்  நடவடிக்கையின் காரணமாக  பல உயிரிணங்கள் அழிவடைந்து செல்வதோடு, பல ஆயிரக்கணக்கான தாவரங்களும் அழிவடைந்து செல்கின்றன. 

அந்த வகையில் இலங்கையிலும் சில வகையான தாவரங்கள் அழிந்து செல்லக் கூடிய நிலையில் இருப்பதாக சமூக செயற்பாட்டாளர்கள் கூறி வருகின்றனர். அதில் 'கண்டல் தாவரங்கள்' முக்கியமானதாகும்.  'கண்டல் தாவரங்கள்' என்பது கடற்கரையோரங்களின் சதுப்பு நிலங்களில் உவர் நீரில்  வளரும் தாவரங்களாகும்.

மனித நடவடிக்கைகளால் உலகிலுள்ள தாவரங்களும், உயிரிணங்களும்  அழிவடைந்து அல்லது அருகி வருகின்றனவோ அவ்வாறே மன்னாரிலும்; கண்டல் தாவரங்கள் அழிவை எதிர் நோக்கியுள்ளன.

மன்னார் மாவட்டத்தில் மன்னார் தீவு பகுதியில் காணப்படுகின்ற சதுப்பு நிலங்களில் அதிகளவான கண்டல் தாவரங்கள் காணப்படுகின்றன. கண்டல் தாவரங்கள் காடுகளாகவும், வளர்ந்த மரங்களாகவும் அடர்த்தியாக சதுப்பு நிலங்களில் வளர்க் கூடியது. 

இவ்வகையாக கண்டல் தாவரங்கள் மனிதனுக்கும்  சூழலுக்கும் பல நன்மைகளை தாரளமாக வழங்குகின்றது.

அந்த வகையில் மீன் இனம் மற்றும் இறால் பெருக்கத்திற்கும், கால் நடைகளின் உணவு, கடற்கரை பாதுகாப்பு,   கடல் வளங்களை பேணுதல், கடல் நீரை தூய்மையாக்குதல், கடல் வாழ் அங்கிகளுக்கான வாழ்விடமாக, பசளை உற்பத்திக்கு, பறைவைகளின் புகழிடமாக, மண் அரிப்பை தடுப்பது  என கண்டல் தாவரங்களின் நன்மைகள் பல உள்ளது.

ஆனால் மன்னாரில் கடற்கரையோரங்களில் காணப்படும் கண்டல் தாவரங்கள் வெட்டப்பட்டு அழிக்கப்பட்டு வருகின்றது.

 இவ்விடையத்தில் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் அசமந்த போக்குடன் செயல் படுவதாக சமூக செயற்பாட்டாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மன்னார் தீவு மற்றும் அதனை அண்டிய கடற்பகுதிகளில் கடற்கரை மற்றும் கடற்பகுதிகளில் அதிகமான கண்டல் தாவரங்கள் காணப்படுகின்றது. எனினும் தற்போது குறித்த கண்டல் தாவரங்கள் அழிவடைந்து வரும் நிலையில் உள்ளது.

குறிப்பாக கடற்கரை மற்றும்,கடல் ஆற்றுவாய் பகுதிகளில் கண்டல் தாவரங்கள் காணப்படுகின்றது. எனினும் குறித்த கண்டல் தாவரங்கள் வெட்டப்படுவதாக சமூக செயற்பாட்டாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

வெட்டப்படும் கண்டல் தாவரங்கள் கடலினுள் கொண்டு சென்று பற்றையாக வைக்கப்பட்டு மீன் பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் சிறு மீனவர்கள் பாதிப்படைந்து வருகின்றனர். அண்மைக் காலங்களில் மன்னாரில் பிரதான பாலத்தின் இரு ஓரங்களிலும் கண்டல் தாவரங்கள் நடுகை செய்யப்பட்டுள்ளது. எனினும் குறித்த கண்டல் தாவரங்கள் பராமறிப்பு இன்றி காணப்படுகின்றது.

இந்த நிலையில் கடற்கரை ஓரங்கள் மற்றும் கடல் ஆற்றுவாய் பகுதிகளில் காணப்படுகின்ற பாரிய கண்டல் தாவரங்கள் அழிக்கப்பட்டு வருகின்றது.

இதனால் கண்டல் தாவரங்களில் வாழும் பறவைகளும் பாதீப்படைவதோடு, குறித்த பறவைகள் கிராமங்களை நோக்கி படையெடுத்துள்ளது.

கண்டல் தாவரங்கள் மீன்களின் வாழிடமாகவும் மீன்கள்   எதிரிகளிடமிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள ஒழிந்து கொள்வதற்கும் பயன்படுத்துகின்றது.

கண்டல் தாவரங்கள் சூழலை மாசுபடுத்தும் காரணிகளை உரிஞ்சும் தன்மை உடையதாக காணப்படுகிறது.

இவ்வாறு அனைத்து வகையிலும் நன்மையினை வழங்குகின்ற கண்டல் தாவரங்கள் மன்னார் மாவட்டத்திலும் 'சுயநலமான மனித நடவடிக்கைகளால்' அழிக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக இந்த கண்டல் தாவரங்களை மீனவர்களே அதிக அளவில் தங்களின் பல்வேறு தேவைகளுக்கு அழித்து வருவது கவலையை ஏற்படுத்தகின்ற விடையமாக காணப்படுகின்றது.

கடற்றொழிலாளர்களை பொறுத்தவரை கண்டல் தாவரங்களை  தங்களின் வாழ்வாதார மேம்பாடு கருதி பாதுகாக்க  வேண்டியது  அவர்களின் தலையாய கடமையாகும். 

ஆனால் அவர்களே அதனை  அழிப்பது என்பது  வேலியே பயிரை மேய்வதற்கு ஒப்பானது.

தேசிய மர நடுகை நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் (வனரோபா) வனமாக்கல் செயற்பாட்டின் கீழ் மன்னார் மாவட்டதில் கடந்த 2018 ஆம் ஆண்டு 2 ஆயிரம் கண்டல் தாவரங்களை நடுகை செய்யும் நிகழ்வு இடம் பெற்றது.

தேசிய சுற்றாடல் வாரத்தையொட்டி அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில்  கரையோர பாதுகாப்பு மற்றும் மூல வள முகாமைதுவ திணைக்களத்தின் எற்பாடில் மன்னார் தள்ளாடி பகுதியில் உள்ள கரையோர பகுதிகளை தூய்மை படுத்தி இயற்கை வளங்களை பாதுகாக்கும் வகையிலும் மீன் இனங்களின் இனப்பெருக்க வீதத்தை அதிகரிப்பதற்க்காகவும் கரையோரங்கள் அரிக்கப்படுவதை தடுப்பதற்க்காவும் கரையோரங்களை அண்டிய தள்ளாடி பகுதியில் 2000 கண்டல் தாவரங்கள் நட்டப்பட்டன.

இலங்கை கரையோர பாதுகாப்பு மற்றும் மூல வள முகாமைதுவ திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பிரபாத் சந்திர கீர்த்தி தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் 500 மேற்ப்பட்ட பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டு கண்டல் தாவரங்களை நாட்டி வைத்திருந்தனர்.

இந்த நிலையில் இவ்வாறு கண்டல் தாவரங்கள் அழிப்பது உகந்த விடையம் இல்லை.

எனவே கண்டல் தாவரங்களை பாதுகாக்கின்ற முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்பதோடு அதனை அழிக்காமல் இருக்கவும்  வேண்டும் என்பதே சமூக செயற்பாட்டாளர்களது எதிர்பார்ப்பு.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54