மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காட்மோர் தோட்ட வீதியில் 13 ஆம் திகதி மாலை மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் உயிழந்தவர் குயின்ஸ்லேன்ட் தோட்டத்திலுள்ள பிரவுன்சுவிக் தோட்டத்தில் வசிக்கும் 22 வயதுடைய ராஜ்குமார் சுமன்  என அடையாளம் காணப்பட்டுள்ளார்.காட்மோர் என்ற இடத்தில் குறித்த இளைஞர் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோதே, குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

 இதன்போது, பலத்த காயமடைந்த குறித்த இளைஞரை டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக கொண்டு சென்ற போது உயிரிழந்துள்ளார் என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச். பண்டார தெரிவித்தார்.

 அத்துடன்  இவ்விபத்து குறித்து மஸ்கெலியா பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.