மூன்று நாள் கொண்ட டெங்கு ஒழிப்பு திட்டத்தின் முதல் நாளான நேற்று (30) நாட்டில் டெங்கு நுளம்பு பரவக்கூடிய 18,000 இடங்கள் அடையாளங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நேற்றிலிருந்து (30) எதிர்வரும் ஜுலை 2 ஆம் திகதிவரை டெங்கு ஒழிப்பு திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி நேற்று மேற்கொண்ட தேடுதல் பணியின் அடிப்படையில் 18,055 இடங்கள் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, மாத்தளை, மற்றும் கண்டி போன்ற மாவட்டங்களில் அடையாளங்காணப்பட்டுள்ளன.

இந்நிலையில் அடையாளங்காணப்பட்ட இடங்களின் உரிமையாளர்கள் 139 பேரின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், 853 பேருக்கு எதிராக அறிக்கை விடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.