கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மாலைத்தீவில் சிக்கித்தவித்த 291 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

குறித்த் 291 இலங்கையர்களும்  மாலைத்தீவில்  பல்வேறு துறைகளில் பணிபரிந்தவர்களாவர்.

சிறிலங்கன் விமான சேவைகள்  நிறுவனத்துக்கு சொந்தமான யூ. எல். 1102 என்ற  இலக்க விமானத்தில்  மாலைத்தீவில் இருந்து  இருந்து இவர்கள் இன்று காலை 11.35 மணியளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

மேலும், தாயகம் திரும்பிய இவர்கள் அனைவரையும் கிருமித் தொற்று நீக்கம் செய்யப்பட்டு தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு இராணுவத்தினர் அழைத்துச்செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.