நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை இன்று வெள்ளிக்கிழமை மாலை 10 மணி வரை 1878 ஆக அதிகரித்துள்ளது.

இன்றைய தினம் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவர் இனங்காணப்பட்டுள்ளார்.

இதற்கமைய இது வரையில் நாட்டில் இனங்காணப்பட்டுள்ள கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 1878 ஆக அதிகரித்துள்ளதோடு, குணமடைந்தவர்களின்  எண்ணிக்கை 1196 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேலை தற்போதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான  672 பேர் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வரும்நிலையில், 57 பேர் தொடர்ந்தும் வைத்தியகண்கானிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் நாட்டில் இதுவரை 11 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.