கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைத்த 9 நாடுகள் இவை தான் !

12 Jun, 2020 | 06:31 PM
image

கொரோனாவை கட்டுப்படுத்த பல உலக நாடுகள் போராடி வரும் நிலையில் இதுவரை 9 நாடுகள் கொரோனாவின் பிடியில் இருந்து தப்பித்துள்ளதுடன் கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளன. அவற்றில் முதன்மையான நாடாக நியூசிலாந்து உள்ளது.

நியூசிலாந்து

கொரோனாவின் ஆதிக்கத்திலிருந்து தப்பிய நாடுகளில் குறிப்பிடத்தக்க நாடாக நியூசிலாந்து உள்ளது. நியூசிலாந்து 48.9 இலட்சம் மக்கள் தொகையைக் கொண்ட நாடாகும்.  இங்கும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது. நியூசிலாந்தில் சுமார் 75 நாட்கள் ஊரடங்கு மிகசும் கடுமையாக பின்பற்றப்பட்டது.

மேலும், அந்த காலக்கட்டத்தில் தொடர் பரிசோதனைகளும் அதற்கேற்ற துரித சிகிச்சைகளும் கொரோனாவிற்கு முற்றுப்புள்ளி வைக்க நியூசிலாந்து பெரும் உதவியாக அமைந்தது.

நியூசிலாந்தில் இறுதியாக மே 22 ஆம் திகதிக்கு பின்னர் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று ஏற்படவில்லை. இறுதியாக நியூசிலாந்தில் கொரோனா தொற்று நோயாளி கடந்த ஜூன் 8 ஆம் திகதி குணமடைந்து வீடு திரும்பினார். மொத்தம் நியூசிலாந்தில்  22 பேர் உயிரிழந்துள்ளதுடன் 1,504 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், கொரோனா தொற்றுக்கு முற்றுப்புள்ளி வைத்து வெற்றிபெற்ற நாடாக நியூசிலாந்து தன்னை அடையாளப்படுத்தியது.

தான்சானியா

கிழக்கு ஆபிரிக்க நாடான தான்சானியாவில் கடந்த ஆறு வாரங்களுக்கு முன், புதிதாக கொரோனா பாதித்தவர்களின் விவரங்கள் வெளியிடுவதை நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், கடவுளின் அருளால் கொரோனாவை ஒழித்துவிட்டதாக அந்நாட்டு ஜனாதிபதி அண்மையில்  அறிவித்தார். 509 பேருக்கு மேல் பாதிக்கப்படவில்லையெனவும் அந்நாட்டு ஜனாதிபதி  திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

வத்திக்கான்

சிறிய நாடான வத்திக்கானில் மொத்தம் 12 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதில் கடைசி நோயாளியும் குணமடைந்ததை அடுத்து கடந்த 4 ஆம் திகதி கொரோனா இல்லாத நாடாக அந்நாட்டின் செய்தி தொடர்பாளர் தெரிவித்திருந்தார்.

கொரோனா முற்று முழுவதும் ஒழிந்ததாக அறிவிக்கப்பட்ட பின்னரே சென். பீட்டர்ஸ் சதுக்கத்தில் பாப்பாண்டவர் பிரான்சிஸ் பிரார்த்தனை நடத்தினார்.

பிஜி தீவு

தென் பசுபிக் தீவான பிஜியில் 9 இலட்சம் மக்கள் வாழ்கின்றனர். அங்கு இதுவரை 18 பேர் மட்டுமே கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். சில பகுதிகளில் ஊரடங்கை அமுல்படுத்தி, எல்லையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட அனைவரும் குணமடைந்து விட்டனர். தொடர்ந்து 45 நாட்களாக புதிதாக எவருக்கும் தொற்று ஏற்படாததால், 100 சதவீதம் குணமடைந்துவிட்டதாக அந்நாட்டு பிரதமர் அறிவித்தார்.

மன்டிநெக்ரோ

ஐரோப்பிய நாடான மன்டிநெக்ரோவில் மொத்தம் 324 பேர் கொரோனா தொற்றால், பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 9 பேர் உயிரிழந்தனர். அந்நாட்டில் முதல் தொற்று கண்டுபிடிக்கப்பட்ட 69 ஆவது நாளில் கொரோனாவை ஒழித்து சாத்தியப்படுத்தியுள்ளது. கொரோனாவை ஒழித்த முதல் ஐரோப்பிய நாடாக மன்டிநெக்ரோ திகழ்கிறது.

சீசெல்ஸ்

இந்தியப் பெருங்கடலில் 115 குட்டித் தீவுகளைக் கொண்ட சீசெல்ஸ் கடந்த மே 18 ஆம் திகதி கொரோனா இல்லாத நாடாக அறிவிக்கப்பட்டது. அங்கு, வெறும் 11 பேர் மட்டுமே பாதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. என்பது குறிப்பிடத்தக்கது.

கிட்ஸ் அண்ட் நெவிஸ்

மேற்கு இந்தியத் தீவுகளில் உள்ள நாடான கிட்ஸ் அண்ட் நெவிஸில் மொத்தமே 15 பேர் மாத்திரமே கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

அவர்கள் அனைவரும் வெளிநாடு சென்று திரும்பியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அனைத்து நோயாளிகளும் கடந்த 19 ஆம் திகதியே குணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

கிழக்கு திமோர், பப்புவா நியூகினி

கிழக்கு திமோர் மற்றும் பிசுபிக் நாடான பப்புவா நியூகினி ஆகிய இரண்டு நாடுகளிலும் தலா 24 பேர் மாத்திரமே கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அவர்களும் பூரணமாக குணமடையவே கொரோனா இல்லாத நாடுகளானது.

இந்நிலையில், உலகத்தையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ள கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 180 க்கும் மேற்பட்ட நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதுவரை உலகளவில்  76 இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன்  4 இலட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், 38 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பூரண குணமடைந்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காசாவில் இஸ்ரேலின் தாக்குதலில் கர்ப்பிணிபெண்ணொருவரும் பலி

2025-03-20 17:23:18
news-image

பாலஸ்தீன ஆதரவு மாணவர்களிற்கு எதிரான டிரம்ப்...

2025-03-20 13:53:10
news-image

இந்தியாவில் பஞ்சாப் எல்லையில் ஒரு வருடத்திற்கு...

2025-03-20 12:39:09
news-image

உக்ரைனின் மின்நிலையங்கள் அணுஉலைகளை அமெரிக்கா நிர்வகிக்க...

2025-03-20 11:26:42
news-image

அமெரிக்காவில் சிஐஏ தலைமையகத்திற்கு வெளியே நபர்...

2025-03-19 21:20:40
news-image

டிரம்பிற்கு வழங்கிய வாக்குறுதியை ஒரு சில...

2025-03-19 15:06:57
news-image

அமெரிக்காவில் அரசியலுக்காக மக்கள் இலக்குவைக்கப்படும் நிலை...

2025-03-19 13:37:46
news-image

ஜோன்எவ் கென்னடி படுகொலை - ஆவணங்களை...

2025-03-19 11:03:10
news-image

பெஞ்சமின் நெட்டன்யாகு தனது அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வதற்காகவே...

2025-03-19 10:15:05
news-image

பூமிக்கு திரும்பிய சுனிதா, வில்மோர் :...

2025-03-19 10:57:05
news-image

டிரம்ப் - புட்டின் பேச்சுவார்த்தை -...

2025-03-19 06:37:00
news-image

17 மணி நேர பயணம் :...

2025-03-19 04:55:50