எதிர்காலத்தில் பெரும் அனர்த்தங்களை நாடு சந்திக்க நேரிடும் - வஜிர அபேவர்தன எச்சரிக்கை

Published By: Digital Desk 3

12 Jun, 2020 | 03:41 PM
image

(செ.தேன்மொழி)

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக எதிர்நோக்க வேண்டி ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் சுகாதார நெருக்கடிகளை உரியமுறையில் முகாமைத்துவம் செய்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்தினால் மாத்திரமே முடியும் என்று கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகளை அரசாங்கத்தினால் உரிய முறையில் முகாமைத்துவம் செய்ய முடியவில்லை.

இதனால் நாடு எதிர்காலத்தில் பெரும் அனர்த்தங்களை சந்திக்க வேண்டி ஏற்படும். இந்த அனைத்து நெருக்கடிகளுக்கும் ஐ.தே.க.வினாலேயே தீர்வு காணமுடியும். பொதுத் தேர்தலில் ஐ.தே.க. ஆட்சியமைக்க மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொதாவில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

அரசியலமைப்புக்கு முரணான வகையில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் செயலணி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜனாதிபதி செயலணியினால் எடுக்கப்படும் தீர்மானங்கள் 19 ஆம் அரசியலமைப்பு திருத்தம் மற்றும் பழைய அரசியலமைப்பின் படி சட்டத்திற்கு புறம்பான செயற்பாடாகும்.

அரச நிர்வாகத்துறையினரால் மேற்கொள்ளப்பட வேண்டிய செயற்பாடுகளில் இராணுவத்தினரை ஈடுப்படுத்துவதனால் எதிர்வரும் காலத்தில் பெரும் நெருக்கடியை எதிர்நோக்க வேண்டி ஏற்படும்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் சுகாதார நெருக்கடியை தற்போதைய அரசாங்கத்தினால் உரியமுறையில் முகாமைத்துவம் செய்துக் கொள்ள முடியவில்லை.

அதனாலேயே இன்று பல்வேறு அனர்த்தங்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைமை தோற்றம் பெற்றுள்ளது. தொடர்ந்தும் இவை அதிகரிப்பதற்கான வாய்ப்பு இருக்கின்றது.

இவ்வாறான நெருக்கடியான தருணத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்தினால் மாத்திரமே தீர்வுகாணமுடியும். 

கேள்வி: ஜனாதிபதி செயலணி அரசியலமைப்புக்கு முரணானது என்று நீங்கள் கூறினாலும் , அரசாங்கம் அதனை புறக்கணிக்கின்றதே?

பதில்: செயலணி என்ற பேரில் இராணுவத்தினரின் கையில் நாட்டின் நிர்வாக பொறுப்புகளை ஒப்படைப்பது சட்டத்திற்கு புறம்பான செயற்பாடாகும்.

அதன் காரணமாகவே நாங்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றோம். ஜனநாயக போர்வையிலே நாட்டின் ஆட்சிமுன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த செயலணிகள் ஊடாக அதற்கு பாதிப்பு ஏற்படலாம். அதிகாரத்தை காண்பித்து அதிகாரத்தை கைப்பற்ற முடியாது . நாட்டிற்கு சட்டம் என்று ஒன்று உள்ளது அல்லவா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:31:22
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள்...

2024-04-20 10:26:06
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12