கொழும்பு 7 சுதந்திர சதுர்க்கத்திற்கு அருகில் இருந்து இன்று (12.06.2020) காலை மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட நபர் பம்பலப்பிட்டி பொலிஸ் பார்க் பிரதேசத்தில் தற்காலிகமாக வசித்து வந்தவர் என கறுவாத்தோட்டம் பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் உயிரிழந்தவர் 64 வயதுடைய நபர் எனவும் குறித்த நபர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இதேவேளை, குறித்த நபரின் சடலத்திற்கு அருகில் துப்பாக்கி ஒன்றும் கடிதம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.