இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1<877 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் இலங்கையில் இறுதியாக 8 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 8 தொற்றாளர்களும் இலங்கை கடற்படையினர் என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, கொரொனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 715 பேர் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர்.

அத்துடன் 51 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான 1,150 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இந்நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளான 11 பேர் இலங்கையில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.