வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கான அட்டைகளை புதுப்பிப்பதற்காக விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இவ்வாண்டு டிசம்பர் 31 ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் என்று இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

இன்று வியாழக்கிழமை இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

தற்போது அமுலில் இருக்கும் விதிகளுக்கு அமைவாக OCI  அட்டைகளை வைத்திருப்பவர்களில் முகத்தில் ஏற்படும் வளர்ச்சி மாற்றங்கள் காரணமாக, 20 வயதுக்கு குறைவானவர்கள்   தமது கடவுச்சீட்டுக்களை புதுப்பிக்கும்போதும் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஒரு தடவையும் தமது OCI  அட்டைகளையும் புதுப்பிக்க வேண்டிய தேவை உள்ளது.

  • வெளிநாடுகளில் சிக்குண்டிருக்கும் கீழ்வரும் வரையறைகளுக்கு உட்பட்டவர்களை இந்தியாவுக்கு பயணிப்பதற்கு இந்திய அரசு அனுமதிக்கின்றது:
  • வெளிநாடுகளில் இந்திய பிரஜைகளுக்கு பிறந்த நிலையில் OCI அட்டைகளை வைத்திருக்கும் சிறுபராயத்தினர்.
  • குடும்ப உறவினரின் மரணம் போன்ற அவசர குடும்ப தேவைகளுக்காக  இந்தியாவுக்கு வருகைதர விரும்பும் OCI  அட்டை வைத்திருப்போர்.
  • தம்பதிகளில் ஒருவர் OCI  அட்டை வைத்திருக்கும் நிலையில் மற்றவர் இந்திய பிரஜையாகவும் இந்தியாவில் நிரந்தர வசிப்பிடத்தை கொண்டிருப்பவர்களாகவும் இருப்போர்.
  • OCI  அட்டை வைத்திருக்கும் பல்கலைக்கழக மாணவர்கள் (சட்டரீதியாக சிறு பராயத்தினர் அல்லாதோர்) ஆனால் பெற்றோர் இந்தியாவில் வசிக்கும் இந்திய பிரஜைகளாக இருத்தல் அவசியம்.

ஏனைய சகலரும், இந்திய அரசாங்கத்தினால் சர்வதேச பயணத்தடை நீக்கப்படும் நிலையிலும், இந்தியாவை நோக்கியும் இந்தியாவிலிருந்தும் பயணிப்பதற்கான தடை OCI  அட்டை வைத்திருப்போருக்கு நீக்கப்படும் சந்தர்ப்பத்திலும், மேலே குறிப்பிடப்பட்டவாறு புதிய கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொண்ட OCI  அட்டை  வைத்திருப்பவர்கள் அதனை புதுப்பிக்க வேண்டிய தேவையில் இருப்பினும் தமது OCI  அட்டைகளுக்கு அமைவாக பயணிப்பதற்கு அனுமதிக்கப்படுவார்கள். ஆனாலும் OCI  அட்டை வைத்திருப்பவர்கள் OCI  அட்டை ,தற்போதைய கடவுச்சீட்டு, OCI  அட்டை யில் பதியப்பட்ட தரவுகளுடனான முன்னைய கடவுச்சீட்டு ஆகியவற்றுடன் பயணிக்க வேண்டும்.  

--