களுவாஞ்சிகுடி பெரும்போக உத்தியோகஸ்தர் பிரிவுக்குட்பட்ட துறைநீலாவணையை சூழவுள்ள விவசாயக்குளங்களில் பொதுமக்கள் சிலர் தங்களின் வீட்டுக்கழிவுகளை சூட்சுமமான முறையில் கொட்டி வருகின்றார்கள்.
குறிப்பாக கரைச்சாக்குளம், குமாரப்போடியார் குளம், ஆழ்வாங்குளம், போன்ற குளங்களிலே தங்களின் வீடுகளில் சேமிக்கப்படும் கழிவுப்பொருட்களை அத்துமீறி வீசி வருகின்றனர்.
மேற்படி, குளங்களில் மழைநீரையையும், ஏற்று நீர்ப்பாசனத்தையும் நம்பி விவசாயம் செய்கை பண்ணப்பட்டு வருகின்றது.
இவ்வாறு குளத்துநீரை பயப்படுத்தி 320 ஏக்கர் வேளாண்மை செய்கை பண்ணப்படுகின்றது. வீடுகளில் சேமிக்கப்படும் இலத்திரனியல் கழிவுகள், பிளாஸ்ரிக் பொருட்கள், சமையல் கழிவுகள், உடைந்த போத்தல்கள், பாவித்த பொருட்கள், மரம் செடி கொடிகளின் கழிவுகள், உட்பட பலகழிவுப் பொருட்களை பொறுப்பற்ற வித்தில் வீசி வருகின்றனர்.
இவ்வாறு குளங்களில் கொட்டுவதால் விவசாயிகள், பொதுமக்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பலதரப்பட்டோரும், நடமாடமுடியாத நிலையிலும், சுற்றுச்சுழல் பாதிப்படையும் நிலையில் பல அசௌரியங்களை முகம்கொடுத்து வருவதாக கவலை தெரிவிக்கின்றார்கள்.
அத்துமீறி குளங்களில் கழிவுப்பொருட்களை வீசுவதை தவிர்க்குமாறு விவசாயிகள் கோரிக்கை முன்வைப்பதோடு இனிமேல் இவ்வாறான சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஏற்படுத்து செயற்பாடுகளை நிறுத்தப்பட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
இக்குளங்களில் கொட்டப்படும் கழிவுகளை நிறுத்துவதற்குரிய நடவடிக்கையை குளங்களில் கழிவுகளை வீசுவோருக்கு எதிராக சம்மந்தப்பட்ட அதிகாரிகள், பொது அமைப்பினர் உள்ளிட்ட அனைவரும் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை முன்வைக்கின்றார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM