பணம் இல்லை என்கிறது அரசாங்கம்

11 Jun, 2020 | 06:03 PM
image

(ஆர்.யசி)

பல்கலைக்கழக மாணவர்களுக்கான மகாபொல  புலமைப்பரிசில் நிதி வழங்க அரசாங்கத்திடம் பணம் இல்லை. எனவே கடன்களை பெற்றேனும் மாணவர்களுக்கு நிதியை வழங்கவே அரசாங்கம் முயற்சிக்கின்றது என அரசாங்கம் கூறுகின்றது.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பு இன்று அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சரவை இணை பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன இதனைக் கூறினார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

பல்கலைக்கழகங்களில் 60 ஆயிரம் மாணவர்கள் மாதம் 5 ஆயிரம் ரூபாய் மகாபொல புலமைப்பரிசில் நிதி உதவிகளை பெறுகின்றனர். இதனால் ஒரு மாதத்திக்கு 160 மில்லியன் ரூபாய்கள் செலவாகின்றது. இந்த நிதித்தொகையில் 51 வீத நிதியானது மகாபொல புலமைப்பரிசில் ஒதுக்கீட்டு நிதியில் வழங்கப்படுகின்றது. ஏனைய 49 வீத நிதியும் திறைசேரியின் மூலமாக வழங்கப்படுகின்றது.திறைசேரி நிதி என்பது  பொதுமக்களின் வரிகளில் சேர்க்கப்படும் பணத்தில் ஒதுக்கப்படுகின்றது.  

கடந்த மூன்று மாதங்களில் அபிவிருத்தி லொத்தர் செயற்பாட்டில் இல்லை, ஏனைய வழிகளில் திறைசேரிக்கு பணம் வரவும் இல்லை . ஆகவே அரசாங்கம் நிதி நெருக்கடியில் உள்ளோம்.  மகாபொல நிதியில் பல மோசடிகள் கடந்த காலங்களில் இடம்பெற்றது.

அது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றது. எவ்வாறு இருப்பினும் மாணவர்களுக்கான புலமைப்பரிசில்  நிதி வழங்க எந்த வழிமுறையும் இல்லை. எனவே கடன்களை பெற்றேனும் இந்த நிதியை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க முயற்சிக்கின்றது. இருக்கின்ற நிதியை வைத்துக்கொண்டு ஏனைய நிதிக்கு கடன் பெற்றுக்கொண்டு நிலைமைகள் வழமைக்கு திரும்பும் வரையில் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் நிதியை வழங்க அமைச்சரவையில் அனுமதியை பெற்றுள்ளோம்.   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right