நைஜீரியாவின் போர்னோ மாகாணத்தில் உள்ள பதுமோ கொலோராம் என்ற கிராமத்தில் போகோஹரம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் 80 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

 A woman tends to animals in Faduma village, which came under attack by suspected Boko Haram militants on Tuesday.

அந்த வகையில் நேற்று முன்தினம் மதியம் போர்னோ மாகாணத்தில் உள்ள பதுமோ கொலோராம் என்ற கிராமத்துக்கு நுழைந்த போகோஹரம் பயங்கரவாதிகள் பொதுமக்கள் மீது சரமாரியாக துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டனர்.

இதில் அந்த கிராம மக்கள் பலர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். இதையடுத்து அங்கிருந்த 1,200 கால்நடைகளையும், ஒட்டகங்களையும் பயங்கரவாதிகள் கொள்ளையடித்து சென்றனர்.

கடந்த 2 ஆண்டுகளில் இராணுவத்திற்கு எதிராக பல முறை போகாஹரமினர் தாக்குதல்களை மேற்கொண்டுவரும் நிலையில், கடந்த சில மாதங்களில்தான் பொதுமக்கள் மீதான தாக்குதல்களை இவர்கள் தீவிரப்படுத்தி உள்ளனர்.

இவர்களின் 10 வருடகால தாக்குதல்களில் சிக்கி இதுவரை 36 ஆயிரம் பேர் கொல்லபட்டுள்ளதோடு,  20 இலட்சம் பேர் வரை  இடம் பெயர்ந்துள்ளனர்.

இந்நிலையில, போகோஹரம் பயங்கரவாதிகள் நைஜீரியாவில் மட்டுமல்லாது அதன் அண்டை நாடுகளான நைஜர், சாத், கமரூன் ஆகிய நாடுகளிலும் இவ்வாறான பயங்கரவாத தாக்குதல்களை மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.