ஆவண மோசடிக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மஹிந்த ராஜபக் ஷவின் ஆதரவணி எம்.பி. யான உதய கம்மன்பில சற்றுமுன்னர் கொழும்பு கோட்டை மஜிஸ்திரேட் நீதிமன்றினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலிய தனியார் நிறுவனமொன்றிற்கு சட்டவிரோதமான முறையில் பங்குகளை விற்பனை செய்தார் என்ற குற்றச்சாட்டில், விசேட பொலிஸ்  விசாரணை பிரிவால் கைதுசெய்யப்பட்ட உதய கம்மன்பிலவை, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.