யாழ்ப்பாணத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்களில் 28 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவர்களுக்கு தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

எனினும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 61 பேரும் தொடர்ந்தும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பார்கள் என்றும் குறிப்பிடடார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த இந்திய புடவை வியாபாரியுடன் தொடர்புகளை பேணியதாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள 61 பேரில் 28 பேருக்கு இரண்டு கடடங்களாக நடத்தப்பட்ட பரிசோதனையில் ஒருவருக்கும் தொற்றில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதில் 13 பேருடைய மாதிரிகள் கொழும்பிற்கும் 15 பேருடைய மாதிரிகள் யாழ்ப்பாணத்திலும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படடன.எனினும் அவர்களில் அனைவருக்கும் தொற்று இல்லை என உறுதியாகியுள்ளது.

எனினும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள 13 குடும்பங்களை சேர்ந்த 61 பேரும் 14 நாட்களுக்கு தொடர்ச்சியாக தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றார்.