இஸ்ரேல், கிர்யத் அர்பா என்ற கிராமத்தில் உள்ள ஒரு வீட்டுக்குள் நேற்று புகுந்த இனந்தெரியாத நபர் படுக்கையறைக்குள் தனியாக இருந்த ஹல்லேல் யாஃபா அரியேல் என்ற 13 வயது சிறுமியை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார்.

குறித்த சம்பவம் பற்றி தகவலறிந்து அவனை பிடிக்கச் சென்ற இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் மீது கொலையாளி நடத்திய தாக்குதலில் ஒரு வீரர் காயமடைந்ததாகவும், பின்னர் அவனை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றதாகவும் இஸ்ரேல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த தாக்குதல் தொடர்பாக தமது கருத்தை தெரிவித்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, சுட்டுக் கொல்லப்பட்ட 19 வயது பாலஸ்தீன இளைஞனின் வீடு இடித்து தள்ளப்படும். மேலும், அவரது குடும்பத்தாருக்கு வேலை செய்வதற்கான அளிக்கப்பட்டிருக்கும் அனுமதி பத்திரமும் ரத்து செய்யப்படும் என அறிவித்துள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்த சிறுமி இஸ்ரேல் நாட்டில் குத்திக் கொல்லப்பட்டுள்ள சம்பவத்துக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி கண்டனம் தெரிவித்துள்ளார்.