பெருந்தோட்ட மக்கள் எதிர்நோக்கி வரும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆராய்வதுடன் அப்பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வொன்றினை ஏற்படுத்தும் முகமாக ஜனாதிபதி செயலணியொன்றினை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவிற்கு அழுத்தங்களைக் கொடுக்கவேண்டுமென்று இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் நிதிச் செயலாளர் இராஜநாயகம் சலோபராஜா குறிப்பிட்டார்.

மேற்படி ஜனாதிபதி செயலணி குறித்து ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு, இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளரும், பிரதமர் மகிந்த ராஜபக்சவின் ஆலோசகருமான எஸ். சதாசிவத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல தீர்மானித்துள்ளதாக, அம் முன்னணியின் நிதிச் செயலாளர், மேற்கண்ட விடயத்தை முன்வைத்துள்ளார். இக்கோரிக்கை மகஜரொன்றின் மூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அக் கோரிக்கை மகஜரில் தொடர்ந்து, நாட்டில் நிலவும் அதி முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வுகளை ஏற்படுத்து முகமாக ஜனாதிபதி செயலணிகள் ஏற்படுத்தப்பட்டு, செயற்பாடுகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இச் செயற்பாடுகள் வரவேற்கத் தக்கனவாகவேயுள்ளன. இவ்வகையில் பெருந்தோட்டங்களில் நிலவும் பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்கும், இது போன்ற ஜனாதிபதி செயலணியொன்று ஏற்படுத்தப்பட வேண்டியது,காலத்தின் அவசியத் தேவையாக இருந்து வருகின்றது.

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தீர்விற்கு, பெருந்தோட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இ.தொ.கா., இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், தோட்டத் தொழிற்சங்க கூட்டமைப்பு என்ற வகையில் தோட்டத் தொழிற்சங்க அமைப்புக்களும்ரூபவ் தோட்ட முதலாளிமார் சம்மேளனமும் இணைந்து ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கொருமுறை கூட்டு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டு வருகின்றது.

இக்கூட்டு ஒப்பந்தத்தில் பெருந்தோட்டங்கள் பராமரிப்பு, தொழிலாளர் சேமநலன்,தோட்ட அபிவிருத்தி,  தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு போன்ற பல்வேறு விடயங்களுக்கு தீர்வினை ஏற்படுத்தும் சரத்துக்கள், அவ் ஒப்பந்தத்தில் உள்ளடங்கியுள்ளன. ஆனால், அச்சரத்துக்களில் தொழிலாளர்களின் சம்பள விடயம் மட்டுமே ஒவ்வொரு இரு வருட கூட்டு ஒப்பந்தத்திலும் பேசப்படுகின்றது. அதைத் தவிர கூட்டு ஒப்பந்தத்தில் புகுத்தப்பட்டிருக்கும் ஏனைய சரத்துக்கள் குறித்துரூபவ் காத்திரமாக கலந்துரையாடப்படுவது குறைவாகவே உள்ளது. அதனால்ரூபவ் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் வானளாவ உயர்ந்துள்ளன. அதைத் தொடர்ந்து அம் மக்கள் தத்தம் வாழ்வாதாரங்களை மேற்கொள்வதற்கும் முடியாமல்,சொல்லொண்ணாத் துயரங்களை அனுபவித்து வருகின்றனர்.

இரு வருடங்களுக்கொருமுறை மேற்கொள்ளும் கூட்டு ஒப்பந்தத்தில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு குறித்து பேசப்பட்டு சம்பள உயர்வு வழங்கப்பட்டாலும், அச்சம்பள உயர்வும் தொழிலாளர்களுக்கு ஏற்புடையதாக அமையாதுள்ளது. வாழ்க்கைச் செலவினை, ஈடுசெய்ய முடியாத சொற்ப சம்பள உயர்வே வழங்கப்படுகின்றது. ஆகையினால், மேற்கொள்ளப்படும் கூட்டு ஒப்பந்தத்திலும் பெருந் தோட்டத் தொழிலாளர்கள் நம்பிக்கை இழந்துள்ளனர்.

பெருந்தோட்டங்கள் எத்தகைய பராமரிப்புக்களுமின்றி இருந்து வருகின்றன. இதனால் தேயிலை உற்பத்தியும் வெகுவாகக் குறைந்துள்ளன. பெருந்தோட்டங்கள் காடுகளாகி இருந்து வருவதால், சிறுத்தைப் புலிகள், குளவிக் கூடுகள், பாம்புகள் போன்ற விஷப் பிராணிகள் பெருகியுள்ளன. குளவிக் கொற்றல்களுக்குக்கிழக்காகி இதுவரையில் ஐந்து பேர் பலியாகியுள்ளனர். அத்துடன் சிறுத்தைப் புலிகள்,பாம்புகள் உள்ளிட்ட விஷப் பிராணிகளினால் பாதிக்கப்பட்டவர்கள் பலருக்கு இப் பாதிப்புக்களினால் உரிய நிவாரணங்கள் வழங்கப்பட்டதாக தெரியவில்லை. சிறுத்தைப் புலிகள்,குளவிக் கூடுகள், பாம்புகள் இவைகளை அகற்றவோ, இவைகளினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காப்புறுதி நிவாரணங்களோ வழங்கப்படுவதற்கான ஏற்பாடுகளுமில்லாதுள்ளன.

மலையகப் பெருந்தோட்டங்களில் தற்போதைய நிலையில், ஒன்றரை இலட்சம் தொழிலாளர்கள் தொழில் கடமைகளில் ஈடுபட்டுள்ளனர். அண்மைக் காலமாக தேயிலையின் விலை உயர்வடைந்த நிலையிலும்,தோட்டத் தொழிலாளர்களின் நீண்டகாலக் கோரிக்கையான ஆயிரம் ரூபா சம்பள உயர்வு விடயமாக எத்தகைய நடவடிக்கைகளும் எடுக்கப்படாதுள்ளன. ஆனால் தோட்ட முதலாளிமார் சம்மேளனமோ தோட்டங்கள் நஸ்டத்தில் இயங்குவதாக கூறுகின்றது. இதனை எம்மால் எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. பெருந்தோட்டங்களை நம்பியிருக்கும்ரூபவ் இத் தோட்டத் தொழிலாளர்களை பாதுகாத்தாக வேண்டும்.

இவ்வகையில்,  பல்வேறு பாதிப்புக்களை எதிர்நோக்கியிருக்கும் தொழிலாளர்களின் மேம்பாடுகள், உட்கட்டமைப்பு வசதிகள்,வாழ்வாதாரங்கள்ரூபவ் சம்பள உயர்வுகள் ஆகியனவற்றை பாரபட்சம், பாகுபாடுகள் எதுவுமின்றி பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு முறையாகவும் கிரமமாகவும் கிடைக்க வேண்டும். இதற்கு ஒரே வழி பெருந்தோட்ட மக்கள் விடயத்தில் ஜனாதிபதி செயலணியொன்று ஏற்படுத்தப்படல் வேண்டும்.

இச் செயலணிக்கு தொழிற்திணைக்களத்தின் சிரேஸ்ட தொழிலதிகாரி, அனுபவமிக்க தொழிற்சங்கவாதிகள், தொழில் அமைச்சர் அல்லது செயலாளர், மனித உரிமை ஆணையக சிரேஸ்ட அதிகாரி, பெருந்தோட்டக் கம்பனியின் நிறைவேற்றுப் பணிப்பாளர்,பெருந்தோட்ட உற்பத்தி திறனாளி, கல்விசார்

திறன்மிக்க அதிகாரிரூபவ் பெருந்தோட்ட ஆய்வாளர் என்ற வகையிலான குழுவொன்றும் நியமிக்கப்படல் வேண்டும். இச்செயலணி மூலமே, பெருந்தோட்ட மக்களின் மேம்பாடுகள் தங்கியுள்ளன. இதுவிடயமாக எமது முன்னணியின் பதுளை மாவட்டக் குழுக் கூட்டத்திலும்,முன்மொழியப்பட்டு, ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானமுமாகும்.

எமது முன்னணியின் பொது செயலாளர் எஸ். சதாசிவம்ரூபவ் பெருந்தோட்ட ஆலோசகராக இருந்து வருவதினால்  அவரது ஆலோசனையுடன் ஜனாதிபதி செயலணி செயற்படும் போது பெருந்தோட்ட மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கும் இன்னல்களுக்கும் தீர்வுகளை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.