தரம் 10 இல் கல்வி கற்கும் தனது காதலியை கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் 17 வயது இளைஞனை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட இளைஞன் தனது கல்வியை இடைநிறுத்திவிட்டு மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றார்.

குறித்த மாணவியின் தாய் வெளிநாடொன்றில் பணிபுரிந்துள்ள நிலையில், மாணவி தந்தையுடன் சிலாபம் பகுதியில் வசித்து வந்துள்ளார். 

கடந்த ஏப்ரல் 12 ஆம் திகதி குறித்த மாணவி காணமல் போயுள்ள நிலையில், மாணவியின் தந்தை மகளை தேடவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் வெளிநாட்டிலிருந்து வருகைத்தந்த தாய் மகளை தேடியுள்ளதுடன், கணவரை பொலிஸில் முறைப்பாடு செய்யுமாறு தெரிவித்துள்ளார்.

அதன் பிறகு குறித்த மாணவியின் தந்தை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் குறித்த இருவரையும் கண்டுபிடித்து விசாரணையை மேற்கொண்டதில் இளைஞன் மாணவியை கடத்தி பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டமை தெரியவந்துள்ளது.

இதன்போது மாணவி பொலிஸாரிடம், குறித்த இளைஞனை காதலித்ததாகவும், அதன் காரணமாகவெ இளைஞன் கடத்திச் சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.

கடத்திச் சென்ற இளைஞன் மாணவியை தன்னுடைய இடத்தில் இரண்டு நாட்கள்  தங்க வைத்திருந்ததோடு, ஏப்ரல் 15 ஆம் திகதி கறுவலகஸ்வெவ பகுதியிலுள்ள இளைஞனின் உறவினரின் வீட்டில் தங்க வைத்ததாக மாணவி தெரிவித்துள்ளார்.

இதேவேளை மணவி வைத்திய பரிசோனைகளுக்காக  சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், இளைஞனை கைது செய்து சிலாபம் மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.