மன்னார் மடு தேவாலயத்தின் திருவிழாவிற்கான முன் ஆயத்தம் தொடர்பாக ஆராய்வு

Published By: Digital Desk 3

11 Jun, 2020 | 10:18 AM
image

மன்னார் மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழாவிற்கான முன் ஆயத்தம் தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடல் நேற்று  (10.06.2020)  மன்னார் மாவட்டச் செயலகத்தில்,மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தலைமையில் இடம் பெற்றது.

மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகையின் பங்கு பற்றுதலுடன் இடம் பெற்ற குறித்த கலந்துரையாடலின் போது மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார், மடு திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை பெப்பி சோசை அடிகளார், மேலதிக அரசாங்க அதிபர்,உதவி அரசாங்க அதிபர்,பொலிஸ், இராணுவம், கடற்படை உயர்  அதிகாரிகள், பிரதேசச் செயலாளர்கள், அழைக்கப்பட்ட திணைக்களங்களின் தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

எதிர் வரும் ஆடி மாதம் 2 ஆம் திகதி திருவிழா நடைபெறும் நிலையில் முன் ஏற்பாடுகள்,சுகாதார நடவடிக்கைகள்,பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விடையங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது.

இதன் போது எதிர் வரும் 2 ஆம் திகதி இடம் பெறவுள்ள அடி மாத திருவிழாவின் போது மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட உள்ளதோடு, சுகாதார நடை முறைகளை பேணி திருவிழா நடைபெறும் எனவும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19