கொரோனா தொற்று பரவியிருக்கும் இந்த தருணங்களில் மக்கள் பொது இடங்களில் கூடும் போது முக கவசம் அணிந்திருக்கவேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு பரிந்துரை செய்திருக்கிறது.

இது தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது..

கொரோனா நோய்தொற்று பரவல் அதிகமுள்ள பகுதிகளில் இருக்கும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், கட்டாயம் முக கவசம் அணிந்து கொண்டுதான் வெளியில் செல்ல வேண்டும். அவர்கள் பொது இடங்களில் கூடும் போதும் முக கவசத்தை அணிந்திருக்கவேண்டும். அத்துடன் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தால், மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் தரமான முக கவசங்களை அணிந்து கொள்ள வேண்டும். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் முக கவசம் அணிந்துக் கொண்டு பொது இடங்களுக்கு செல்லக்கூடாது.

பொதுவிடங்களில் மக்கள் கூடும் போது சமூக இடைவெளியை கடைப்பிடிக்க முடியாத நிலை ஏற்படும் பொழுது, குறைந்தபட்சம் முகக் கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்த வேண்டும். ஏனெனில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்கு முக கவசம் அணிந்தால் பலன் உண்டு என்பதற்கான ஆதாரங்கள் வெளியாகின்றன. ஆனால் முக கவசம் அணிந்துகொண்டால்..கொரோனா வைரஸ் பரவலைத் தடுத்துவிடலாம் என்று யாரும் அலட்சியமாக இருந்துவிடக்கூடாது.” என்று தெரிவித்திருக்கிறது.