ஜப்பானுக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க நாடு திரும்பிய பின்னரே இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநர் நியமிக்கப்படுவார் என தெரிவிக்கப்படுகின்றது.

நாணய சபையின் சட்டத்தின் பிரகாரம் புதிய ஆளுநர் ஒருவர் நிமிக்கப்பட வேண்டுமாயின் நிதியமைச்சரின் ஆசோசனையை கட்டாயம் பெறவேண்டும். இதற்கமைய நிதியமைச்சர் நாடுதிரும்பிய பின்னரே புதிய ஆளுநர் நியமிக்கப்படுவார் என தெரிவிக்கப்படுகின்றது.

ஜப்பானுக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள நிதியமைச்சர் எதிர்வரும் 4 ஆம் திகதி நாடு திரும்புவார் என்பது குறிப்பிடத்தக்கது.