சசிகுமார், சரத்குமார் நடிப்பில் தயாராகியிருக்கும் ‘நா நா’ என்ற படத்தின் தொலைக்காட்சி மற்றும் டிஜிற்றல் உரிமையை சன் தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றியிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது.

சசிகுமார் - சரத்குமார் இணையும் 'நா ...

‘கிராமத்து நாயகன்’ என்ற அடைமொழியுடன் உலாவரும் நடிகர் சசிகுமார் நடித்திருக்கும் படம் ‘நா நா’. ‘நான் நாராயணன்’ என்ற பெயரின் முதல் எழுத்துகளை தலைப்பாகக் கொண்டிருக்கம் இப்படத்தில் சசிகுமாருடன் நடிகர் சரத்குமாரும் இணைந்து நடித்திருக்கிறார்கள்.  இவர்களுடன் இயக்குநர் இமயம் பாரதிராஜா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கல்பதரு பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் பிகே ராம்மோகன் தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்தை, விஜய் அன்ரனி நடிப்பில் வெளியான ‘சலீம்’ என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் என் வி.  நிர்மல் குமார் இயக்கியிருக்கிறார்.

கடந்த ஆண்டில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. எக்சன் அட்வென்சர் ஜேனரில் தயாராகியிருக்கும் இந்தப் படத்தில் சசிகுமார், முன்னாள் பொலிஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். இப்படத்தின் டிஜிற்றல் மற்றும் தொலைக்காட்சி உரிமையை சன் தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றியிருப்பதாக அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகியிருக்கிறது.

சசிகுமார் நடிப்பில் தயாராகியிருக்கும் ‘கொம்பு வச்ச சிங்கம்டா’மற்றும் ‘ராஜவம்சம்’ ஆகிய படங்களும் விரைவில் வெளிவர காத்திருக்கிறது.