நீடித்து உழைக்கும் நுகர்வோர் சாதனங்களை விற்பனை செய்வதில் நாட்டில் மிகவும் நம்பிக்கை மிக்க வர்த்தகநாமமாகத் திகழும் சிங்கர் ஸ்ரீலங்கா பீஎல்சி, நாடெங்கிலும் மனையியல் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் முகமாக கல்வியமைச்சுடன் இணைந்து “Singer Soopa Shasthra” என்ற நிகழ்ச்சியின் இரண்டாம் கட்டத்தை வெற்றிகரமாக ஆரம்பித்து வைத்துள்ளது.

ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் மகிழ்ச்சி பொங்கும் குடும்பத்திற்கு ஊட்டச்சத்து மிக்க சமையல் முறை மிகவும் முக்கியமான ஒரு அங்கம் என்பதை வலியுறுத்தி, பாடசாலைகளில் மனையியல் பாடநெறியை மேம்படுத்தும் நோக்குடன் “Soopa Shasthra” நிகழ்ச்சி 2015 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. 

நவீன சமையலறை சாதனங்களை உபயோகித்து, குறைந்த நேரத்தில் எவ்வாறு ஆரோக்கியமான உணவுகளை தயாரிப்பது என்பது தொடர்பான வழிகாட்டலை வழங்கி, இலங்கையிலுள்ள குடும்பங்கள் தமது பாரம்பரிய விழுமியங்கள் மற்றும் சுவையை இழக்காது சரியானவற்றை சமைக்கவும், சரியானவற்றை உண்ணவும் அவர்களுக்கு வலுவூட்டியுள்ளது. 

இந்த தனித்துவமான முன்னெடுப்பின் இரண்டாம் கட்டத்தின் கீழ், உதவிகள் மிகவும் தேவைப்பட்ட 150 பாடசாலைகள் அனைத்து மாகாணங்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் தெரிவு செய்யப்பட்டு, அங்கு மனையியல் வகுப்புக்களை மேம்படுத்தும் வகையில் சிங்கர் சாதனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலமாக இது வரை மொத்தமாக 300 பாடசாலைகளுக்கு சிங்கர் சாதனங்கள் வழங்கப்பட்டுள்ளன. 

றைஸ் குக்கர், மேசைக்கு மேல் வைக்கக்கூடிய காஸ் அடுப்பு, பிரெஷர் குக்கர், பிளென்டர் மற்றும் மின்சாரத்தில் இயங்கும் Oven என அண்ணளவாக ரூபா 35,000 பெறுமதி கொண்ட சாதனங்களை வழங்கி, முற்றுமுழுதான ஒரு மனையியல் வகுப்பை சிறப்பாக முன்னெடுப்பதற்கு உதவியுள்ளது.

குறைந்த வசதிகளைக் கொண்ட 150 பாடசாலைகள் கடந்த ஆண்டு நிகழ்ச்சியில் பங்கெடுப்பதற்காக அழைக்கப்பட்டிருந்ததுடன், சிங்கர் வழங்கிய உபகரணங்களின் துணையுடன் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் தமது மனையியல் கற்கைநெறிகளை சிறப்பாக முன்னெடுப்பதற்கான வாய்ப்பைப் பெற்றிருந்தனர். 

மேலும் நாடெங்கிலும் ஆயிரத்து முந்நூறுக்கும் மேற்பட்ட மனையியல் பாட ஆசிரியர்களுக்கு சிங்கர் மனையியல் ஆசிரியர் பயிற்சி செயலமர்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு, நேரத்தை சேமிக்கும் நவீன சமையலறை சாதனங்கள், ஊட்டச்சத்தை உச்சப்படுத்தும் சமையல் முறைகள் என தேசிய பாட விதானத்துடன் ஒன்றிய பயிற்சிகள் அவர்களுக்கு வழங்கப்பட்டன.

நாடளாவியரீதியிலுள்ள சிங்கர் காட்சியறைகளில் நவீன சமையலறை சாதனங்களை இயக்குவது தொடர்பான நேரடி பயிற்சிகளும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. 2015 ஆம் ஆண்டில் இச்செயற்திட்டத்தின் முதலாவது கட்டம் வெற்றிகரமாக பூர்த்தி செய்யப்பட்டதன் பின்னர், க.பொ.த. (உயர் தரம்) பரீட்சையில் மனையியலை ஒரு பாடமாக கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாகவும், கடந்த ஆண்டு நிகழ்ச்சியில் பங்கெடுத்த பாடசாலைகள் மத்தியில் உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் கணிசமான அளவில் மேம்பட்டுள்ளதாகவும் கல்வியமைச்சின் புள்ளிவிபரங்கள் வெளிப்படுத்தியுள்ளன. இந்நிகழ்ச்சியில் பங்கெடுத்த பாடசாலைகளைச் சேர்ந்த ஒரு மாணவர் அதியுச்ச புள்ளிகளைப் பெற்றுக்கொண்டமை சிறப்பம்சமாகும்.

சிங்கர் குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான அசோக பீரிஸ் “Singer Soopa Shasthra” நிகழ்ச்சி தொடர்பாக கருத்து தெரிவிக்கையில்,

“எமது பிள்ளைகள் அறிவு மிக்கவர்களாகவும், வாழ்க்கைக்கு அத்தியாவசியமான திறமைகளைக் கொண்டவர்களாகவும் விருத்தியடைவதற்கு உறுதியான, நிலைபேற்றியல் கொண்ட அத்திவாரத்தை இட வேண்டும் என்பதில் சிங்கர் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளது.

நவீன சமையலறை சாதனங்களை உபயோகிக்கும் பரீட்சயத்தை வளர்த்து, முழுக் குடும்பத்திற்கும் ஊட்டச்சத்து மிக்க உணவுகளை வழங்கும் மிகச் சிறந்த சமையல் நடைமுறைகளை அறிமுகப்படுத்துவதை இந்நிகழ்ச்சி உறுதி செய்து வருகின்றது. 

சமையலறை சாதனங்கள் துறையில் முதலிடத்தில் திகழ்ந்து வருகின்ற சிங்கர், வழங்கும் நிபுணத்துவ அறிவானது அவர்கள் பெற்றோர்களாக மாறுகின்ற போது வாழ்வின் புதிய அத்தியாயத்தை சிறப்பாக முன்னெடுத்துச் செல்வதற்கான உறுதியான அத்திபாரத்தை இட்டுக்கொள்ள உதவும்.”

கல்வியமைச்சின் மனையியல் கற்கைநெறிக்கான உதவிப் பணிப்பாளரான சுனேத்ரா விக்கிரமசிங்க இந்நிகழ்ச்சியின் முக்கியத்துவம் தொடர்பில் தனது கருத்துக்களை வெளிப்படுத்துகையில்,

 “Singer Soopa Shasthra” நிகழ்ச்சியானது மனையியல் கற்கைநெறி ஆசிரியர்கள் சிங்கர் வழங்கும் உலகப் பிரசித்தி பெற்ற வர்த்தகநாமங்களின் நவீன சாதனங்களின் துணையுடன் நடைமுறைரீதியாக தமது திறமைகளை விருத்தி செய்து கொள்ள மகத்தான அளவில் உதவியுள்ளதுடன், இந்நிகழ்ச்சியானது இப்பாடநெறியை மகத்தான அளவில் அபிவிருத்தி செய்து குறிப்பிடத்தக்க பெறுபேறுகளை ஈட்டும் அளவிற்கு பாரிய அளவில் பங்களிப்புச் செய்துள்ளது.”

நாடளாவிய ரீதியிலுள்ள 420 இற்கும் மேற்பட்ட சிங்கர் காட்சியறைகள் மற்றும் அதே எண்ணிக்கையிலான விற்பனைக்குப் பின்னரான சேவை வலையமைப்பின் துணையுடன் சிங்கர் சமையலறை சாதனங்கள் மற்றும் உபகரணங்கள் கிடைக்கப்பெறுகின்றன. 

இலங்கையில் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதில் நிறுவனம் கொண்டுள்ள அர்ப்பணிப்புடனான ஈடுபாடானது காலத்திற்கு காலம் மீண்டும் இனங்காணல் அங்கீகாரத்தை சம்பாதித்து வருவதுடன், தொடர்ச்சியாக 10 வருடங்களாக “வருடத்திற்கான மக்களின் அபிமானம் பெற்ற வர்த்தகநாமம்” என்ற விருதை வென்றுள்ளதுடன் நாட்டிலுள்ள பத்து “மிகச் சிறந்த வர்த்தக நிறுவனங்கள்” பட்டியலிலும் இடம்பிடித்துள்ளது.