ஆறுமுகனின் பெயர் விருப்பு இலக்க பட்டியலில் மீள் திருத்த வர்த்தமானி விரைவில் வெளிவரும்

By T. Saranya

10 Jun, 2020 | 01:32 PM
image

(ஆர்.யசி)

தேர்தல்கள் திணைக்களம் நேற்று விடுத்த வர்த்தமானி அறிவித்தலில் நுவரெலியா மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளர் பட்டியலில் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பெயரே பதிவாகியுள்ளது. 

விருப்பு இலக்கம் 3 இல் ஆறுமுகன் தொண்டமானின் பெயரை உள்ளவாறே வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

பொதுத் தேர்தல் குறித்த வழக்கொன்று நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டுக்கொண்டு இருந்த கால கட்டத்தில் இந்த விருப்பு இலக்க பட்டியல் தயாரிக்கப்பட்ட காரணத்தினாலும் முதல்கட்ட பெயர்கள் ஆரம்பத்தில் அச்சிடப்பட்ட காரணத்தினாலும் அவ்வேளையில் ஆறுமுகன் தொண்டமான் உயிருடன் இருந்ததாலும் நுவரெலியா மாவட்ட விருப்பு இலக்க பட்டியலில் ஆறுமுகன் தொண்டமானின் பெயர் பதிவாகியுள்ளதாகவும், காலம் சென்ற ஆறுமுகன் தொண்டமானின் வெற்றிடத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள அவரது புதல்வர் ஜீவன் தொண்டமான் குறித்து விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று விடப்படும் என தேர்தல்கள் திணைக்களம் கூறியது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right