தென் கொரியாவுடனான உள்ள அனைத்து தகவல் தொலைத்தொடர்புகளையும் துண்டிக்க முடிவு செய்துள்ளதாக சர்வதேச செய்திகள் செய்தி வெளியிட்டுள்ளன.

அண்மைக்காலமாக இரு நாடுகளுக்கும் இடையில் முறுகல் நிலைமைகள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், இரு நாடுகளின் எல்லைப் பகுதியில் தென் கொரிய எல்லையில் இருந்து வடகொரியாவை தாக்கியும், அவமதித்தும் துண்டுப் பிரசுரங்கள் வீசப்பட்டன. 

இதனால் வடகொரியா அனைத்து தொலைத்தொடர்புகளையும் துண்டிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளது.

அதன் முதற்கட்டமாக வட கொரியா தனது அண்டை நாடான தென் கொரியாவுடனான அனைத்து ஹாட்லைன் சேவைகளையும் துண்டிக்கவுள்ளதாக வடகொரிய அரசு ஊடகமாக கே.சி.என்.ஏ. செய்திவெளியிட்டுள்ளது.

தென் கொரியாவை "எதிரி" என்று வர்ணிக்கும் நிலையில், தவகல் தொடர்பு துண்டிப்பு என்பது முதல் நடவடிக்கை என்று வடகொரியா தெரிவித்துள்ளது.

இந்நலையில், வட கொரிய எல்லை நகரமான கேசோங்கில் அமைந்துள்ள ஒரு தொலைத்தொடர்பு அலுவலகத்திற்கான தினசரி அழைப்புகள் செவ்வாய்க்கிழமை முதல் நிறுத்தப்படுமென வடகொரிய குறிப்பிட்டுள்ளது.

கடந்த 218 ஆம் ஆண்டு இடம்பெற்ற பேச்சுவார்த்தைக்கு பின்னர் இரு நாடுகளும் பதற்றங்களை குறைப்பதற்காக குறித்த தொலைத்தொடர்பு அலுவலகத்தை அமைத்திருந்தன.

கடந்த 1953 இல் கொரியப் போர் நிறைவடைந்த பின்னர் எந்தவொரு சமாதான உடன்பாடும் எட்டப்படாததால் வட கொரியா மற்றும் தென் கொரியா ஆகிய இரு நாடுகளுக்குமிடையில் தொழில்நுட்ப ரீதியிலான போர் தற்போதும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.