ரத்னஜீவன் ஹூல் சிறுபான்மை பிரதிநிதி என்பதாலேயே எதிர்க்கின்றனர் - முஜிபுர்

Published By: Digital Desk 3

09 Jun, 2020 | 08:58 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினரான ரத்னஜீவன் ஹூல் சிறுபான்மையினத்தை சேர்ந்த பிரதிநிதி என்பதாலேயே அரசாங்க தரப்பினர் அவர் மீது எதிர்ப்பை வெளியிட்டுக்கொண்டிருக்கின்றனர் என கொழும்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

அதேபோன்று ரத்னஜீவன் சார்பில் கடந்த 2018 அரசியல் சதி முயற்சியின்போது வழக்கொன்றில் ஆஜராகிய சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வையும் பலிவாங்கும் நோக்கிலேயே கைது செய்துள்ளனர் எனவும் குறிப்பிட்டார்.

கொழும்பில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

ராஜபக்ஷ் அரசாங்கத்தை சார்ந்த அரசியல்வாதிகள் தொடர்ந்து இனவாதத்தை மையப்படுத்தி அரசியலை முன்னெடுத்து வருகின்றமை இந்நாட்டை படுபாதாளத்திற்கே தள்ளிவிடும்.

இந்த நிலையில் இன்னும் 50 அல்ல 100 வருடங்கள் கடந்தாலும் நாடு அபிவிருத்தி அடையப் போவதில்லை. எனது பாட்டனின் காலத்தில் இந்த நாடு சுதந்திரத்துக்காக ஏங்கிக்கொண்டிருந்தது.

தந்தையின் காலத்தில் தேசபிதாக்கள் ஒன்றிணைந்து பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரத்தை பெற்றுத் தந்தனர். இதன்மூலம் சில காலத்திற்குள் இந்நாடு அபிவிருத்தி காணும் என அவர்கள் எதிர்ப்பாத்தனர்.

ஆனாலும், சுதந்திரம் கிடைத்த கொஞ்ச நாட்களிலேயே இனவாத பிசாசு இந்நாட்டை ஆக்கிரமித்துக்கொண்டது. 

நாம் வாழ்ந்த காலப்பகுதியில் இனவாதத்தின் விளைவாக 30 வருட யுத்தத்தை சந்தித்தோம். விடுதலை புலிகளுக்கு எதிரான யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் இந்நாடு அபிவிருத்தியை நோக்கி பயணிக்கும் என எதிர்ப்பார்த்தோம். எமது பிள்ளைகளுக்கு ஒரு அமைதியான நாட்டை விட்டுச் செல்லலாம் என நினைத்தோம். ஆனால் யுத்தம் முடிந்து நாட்டை கட்டியெழுப்ப ராஜபக்ஷ்வினருக்கு சந்தர்ப்பம் கிடைத்தும் அதனை அவர்கள் துஷ்பிரயோகம் செய்தனர்.

30 வருட கால யுத்தம் முடிந்து ஓரிரு வருடங்களுகள் கடந்த பின்ன சிறுபான்மையினருக்கெதிரான செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன. குறிப்பாக முஸ்லிம்களை ஆயுதப் போராட்டத்திற்கு தள்ளிவிடும் முயற்சியில் சில பேரினவாத சக்திகள் முணைப்புடன் செயற்பட்டன.

இதன் விளைவை நாம் 2019 ஏப்ரல் 21 இல் கண்டோம். எனினும் ஒரு குறிப்பிட்ட சிலர் மாத்திரமே பயங்கரவாதத்தின் பக்கம் சென்றனர். ஒட்டுமொத்த முஸ்லிம்களும் ஆயுதப் போராட்டத்தையோ பயங்கரவாதத்தையோ நாம்பவில்லை. இதில் இனவாதிகள் தோல்வி கண்டாலும் இதைவைத்து அதிகாரத்துக்கு வர முயற்சிக்கின்றனர்.

பேரினவாதிகள் ராஜபக்ஷவினரின் கரங்களை பிடித்துக்கொண்டு நாட்டில் இனவாதத்தை விதைத்து இந்நாட்டை மிக மோசமான நிலைக்குக் கொண்டு செல்வர் என்பது நிச்சயமாகும்.

எமது பிள்ளைகளுக்கு மட்டுமல்ல பேரப்பிள்ளைகளுக்கும் அமைதியான இலங்கையை காண முடியாது என்றே தோன்றுகிறது. பேரினவாதிகள் எல்லா வடிவத்திலும் இனவாத சிந்தனையை புகுத்துகின்றனர். சிறுபான்மையினரின் உரிமைகளில் கைவைக்கின்றனர். நிர்வாக கட்டமைப்பு மற்றும் அரசியல் செயற்பாடுகளிலிருந்தும் சிறுபான்மையினரை ஓரங்கட்டவே முயற்சிக்கின்றனர்.

அதில் ஓர் அங்கமாகவே சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான ரத்ன ஜீவன் ஹூல் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து அவரின் சுயாதீன செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டை  போட முயற்சிக்கின்றனர். அவர் ஒரு சிறுபான்மை பிரதிநிதி என்பதற்காகவே இவ்வாறு ஆளும் தரப்பினர் நடந்து கொள்கின்றனர்.

2018 ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தை வீழ்த்த அன்றைய ஜனாதிபதியும் ராஜபக்ஷ்வினரும் இணைந்து மேற்கொண்ட சதி முயற்சியின் போது ரத்ன ஜீவன் ஹூல் அரசியலமைப்பின் பிரகாரம் அதனை எதிர்த்து குரல் எழுப்பினார். இதற்கெதிராக மேற்கொள்ளப்பட்ட சட்ட நடவடிக்கையின்போது, சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வே ஹூல் சார்பாக ஆஜராகியிருந்தார். இதனாலேயே இன்று ஹிஜாஸ் பலிவாங்கப்படுகின்றார்.

இந்நிலையில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ராஜபக்ஷ்வினர்  பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிக்கு வந்தால், நாட்டின் நிலைமை மிக மோசமடையும். எனவே,  சிறுபான்மை மக்கள் இந்த இக்கட்டான காலத்தில் மிக ஒற்றுமையுடன் செயற்பட்டு தமது வாக்குகளை பிரயோகிக்க வேண்டும் என்றார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீதிக்கான காத்திருப்பும் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது ; மனித...

2026-02-17 19:55:04
news-image

சிறந்த அரசியல் கலாசாரத்தை உருவாக்க புதிய...

2026-02-17 17:19:21
news-image

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர்...

2026-02-17 20:12:55
news-image

நமது நாட்டின் சட்ட ஆட்சி அச்சுறுத்தலுக்கு...

2026-02-17 17:18:54
news-image

இலகு ரயில் போக்குவரத்து திட்டத்துக்கு ஜைகா...

2026-02-17 18:31:47
news-image

பாடசாலைக் கட்டடங்களில் அவசர கால வெளியேற்றப்...

2026-02-17 18:28:00
news-image

பாராளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியம் நீக்கம்: சட்டமூலம்...

2026-02-17 18:07:20
news-image

IMF முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா...

2026-02-17 18:17:29
news-image

இலங்கையின் மீளக் கட்டியெழுப்பும் திட்டம் மீதான...

2026-02-17 18:02:09
news-image

ரயில் சாரதிகள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடத் தீர்மானம்

2026-02-17 17:44:02
news-image

பலாலி அம்மன் ஆலயத்துக்குச் செல்லும் வீதியை...

2026-02-17 17:46:56
news-image

2,000 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

2026-02-17 17:30:57