(செ.தேன்மொழி)
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ இராணுவ ஆட்சிக்கு வித்திட்டு வருவதாக எமக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
ஆரம்பத்தில் இவ்வாறு செயற்படாவிட்டாலும் தற்போதைய போக்குகள் தொடர்பில் எமக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த விடயங்கள் தொடர்பில் ஆரம்பத்தில் விளக்கம் இல்லாவிட்டாலும் பின்னரே இதன் சிக்கல்கள் தொடர்பில் தெரியவரும். இதனால் மக்கள் நன்கு சிந்தித்து தீர்மானம் எடுக்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.
ஆட்சியாளர்கள் எவ்வாறு இருந்தாலும் ஆட்சி முறையில் ஜனநாயகதன்மை மிக்கதாக அமைய வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் பெரும் நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டி ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,
கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடிக்கு மத்தியில் அரசாங்கம் இராணுவத்தை முன்னிறுத்தியே முன்நோக்கி செல்ல முற்பட்டது.
இராணுவத்தின் முப்படைகளின் தளபதிகளையும் முன்னிலை படுத்தியே இவர்கள் செயற்பட்டனர். பின்னர் கடற்படையினருக்கு வைரஸ் தொற்று பரவ ஆரம்பித்ததுடன் கடற்படையினர் மீது குற்றஞ்சாட்ட ஆரம்பித்தனர்.
சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி கடந்த மார்ச் மாதம் 15 ஆம் திகதியே கொரோனாவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதாக தெரிவித்திருந்தார்.
இந்த அரசாங்கத்திடம் சிறந்த வேலைத்திட்டங்கள் எதுவும் இல்லை. முகாமைத்துவம் பூஜியமாக இருக்கும் போது , இராணுவத்தினரை ஈடுபடுத்தியமை நூற்றுக்கு நூறு சதவீதமாக உள்ளது.
ஜனாதிபதி கோத்தாபயவின் அரசாங்கம் ஆட்சிக்கு வந்து முதல் இரண்டு மாதங்களில் முறையாக செயற்பட்டிருந்தாலும் தற்போது இராணுவ ஆட்சிக்கு வித்திட்டு வருவதாகவே தோன்றுகின்றது.
ஜனாதிபதி செயலணி தொடர்பில் அண்மையில் வெளிவந்திருந்த வர்த்தமானியை அவதானித்த போதே இந்த சந்தேகம் மேலும் அதிகரித்துள்ளது.
இராணுவ ஆட்சி தொடர்பில் முதலில் ஒருவரும் பேசாவிட்டாலும் பின்னரே அதன் சிக்கல் தொடர்பில் விளங்கிக்கொள்ள நேரிடும். முதலில் ஜனநாயகம் என்ற போர்வையை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அரசியல் தலைவர்கள் அனைவருமே நல்லவர்கள் கிடையாது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM