(இரா.செல்வராஜா)

கொழும்பு,  கண்டி மற்றும் இரத்தினபுரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் நாளை மறுதினம் வியாழக்கிழமை முதல் டெங்கு ஒழிப்பு  நடவடிக்கை முன்னெடுக்கவுள்ளதாக டெங்கு நோய் ஒழிப்பு பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

கொழும்பு, கண்டி  மற்றும் இரத்தினபுரி ஆகிய  மாவட்டங்களிலே டெங்கு நோய் பரவும் அபாயம் இருப்பதாக  மதிப்பீட்டு அறிக்கையின் ஊடாக தெரிய வந்துள்ளது.

 

வருடத்தில் நிறைவுப் பெற்றுள்ள 5 மாத காலத்திற்குள் 20 ஆயிரத்து 355 டெங்கு நோய் தொற்றாளர்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளார்கள்.

கடந்த மே மாதத்தில் இரத்தினபுரி மாவட்டத்தில் 206டெங்கு நோயாளர்கள்  கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளார்கள். இதே வேளை கடந்த  4ம் திகதி முதல் 7ம் திகதி வரை கொழும்பு பிராந்தியத்தில்  சுகாதார அதிகாரிகள், மற்றும் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் போது டெங்கு நோய் பரவும் அபாயமுல்ல 571 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இது தொடர்பில்  4 பேருக்கு எதிராக   வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 368 பேருக்கு சிவப்பு  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

அத்துடன் 12 ஆயிரத்து 386 இடங்களில் சுற்றாடலை  சுத்தமாக வைக்குமாறு பணிக்கப்பட்டுள்ளதுடன், 6799 தனியார் துறையினருக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாண  சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனின் உத்தரவுக்கு அமைய சுமார் 260 பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து  டெங்கு ஒழிப்பு  நடவடிக்கையில ஈடுப்பட்டுள்ளனர்.