(நா.தனுஜா)

தொடர்பாடல் மற்றும் கூட்டங்களை நடத்துவதற்குப் பயன்படும் நவீன சூம் தொழில்நுட்பத்தின் 4.6.10 முறைமையின்  (Zoom Application version 4.6.10) ஊடாக அதனைப் பயன்படுத்திவோரின் தரவுகள் திருடப்படக்கூடிய வாய்ப்புக்கள் இருப்பதாக இலங்கை கணினி விவகார அவசர ஆயத்தக்குழு எச்சரித்திருக்கிறது.

கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து, வீட்டிலிருந்தவாறே வேலை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால் பெருமளவான முன்னணி நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் என்பன தமது கூட்டங்களையும் கல்வி நடவடிக்கைகளையும் இதனூடாகவே நடத்துகின்றன.

இந்நிலையில் இதுகுறித்து இலங்கை கணினி விவகார அவசர ஆயத்தக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,

தொடர்பாடல் மற்றும் கூட்டங்களை நடத்துவதற்குப் பயன்படும் நவீன சூம் தொழில்நுட்பத்தின் 4.6.10 முறைமையின்  (Zoom Application version 4.6.10) ஊடாக அதனைப் பயன்படுத்திவோரின் தரவுகள் திருடப்படக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன. இந்த சூம் முறைமையில் இடம்பெறும் கலந்துரையாடல்கள் ஊடாகத் தகவல்களைத் திருடுவதற்காக இரு வாய்ப்புக்கள் காணப்படுகின்றமை சைபர் பாதுகாப்பு தொடர்பான  ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டுள்ளன.

அதன்படி இந்த சூம் முறைமையின் பயனர்கள் தமது கலந்துரையாடல்களின் போது ஜிப் வீடியோக்களைப் (GIF) பரிமாற அனுமதிகப்பபடுக்கின்றது. இதனுடாகத் தகவல்கள் திருடப்படும் வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. அதேபோன்று சூம் முறைமையை பயன்படுத்துவதற்காக இரகசிய இலக்கத்தை (Process code) கலந்துரையாடல்களில் பரிமாறுவதன் மூலமும் இந்த முறைமையில் தகவல்கள் களவாடப்படும் சந்தர்ப்பங்கள் உள்ளன.

இதனூடாக மிகவும் இரகசியமான தகவல்கள் கூட தொடர்பற்ற மூன்றாம் தரப்பினருக்குச் செல்லக்கூடிய வாய்ப்புக்கள் இருப்பதாக அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.