இந்திய கிரிக்கெட் அணி ஒரே நாளில் டெஸ்ட் மற்றும் சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடினால், டெஸ்ட் அணிக்கு மற்றும் சர்வதேச இருபதுக்கு 20 அணிக்கு யார் யாருக்கு இடமளிக்கலாம் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தெரிவாளர்களான கிரண் மோரே, எம்.எஸ்.கே. பிரசாத், முன்னாள் வீரரான அஜித் அகர்கர் கருத்து தெரிவித்துள்ளனர்.

கொரோனா காலத்தில் கிரிக்கெட் இல்லாததால் பல்வேறு விதமான சுவாரஸ்யங்களை செய்து பார்ப்பதில் வீரர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். அந்த வகையில் கிரிக்கெட் இணையதளமான கிரிக் இன்போ அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்திய அணிகள் ஒரே நேரத்தில் டெஸ்ட், இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடினால் அணிகள் தெரிவு எப்படி இருக்கும் என முன்னாள் வீரர்கள் சிலரை அணுகி அணியைத் தெரிவு செய்துள்ளது.

இந்திய டெஸ்ட், 20 ஓவர் அணிகளை  அவ்வணியின் முன்னாள் தெரிவுக்குழு தலைவர்களான கிரண் மோரே, எம்.எஸ்.கே. பிரசாத், மற்றும் முன்னாள் வீரர் அகர்கர் ஆகியோர் தெரிவு செய்துள்ளனர்.

கிரண் மோரே தெரிவு செய்த அணிகள்:

டெஸ்ட் அணி: ரோஹித் ஷர்மா, மயங்க் அகர்வால், புஜாரா, விராட் கோஹ்லி (அணித்தலைவர்), ரஹானே, ரி‌ஷாப் பாண்ட், ஜடேஜா, அஷ்வின், இஷாந்த் ஷர்மா, மொஹமட் ‌ஷமி, பும்ரா, அனுமன் விஹாரி.

20 ஓவர் : ஷிகர் தவான், கே.எல். ராகுல், சஞ்சு செம்சன், ஷ்ரேயாஸ் ஐயர், மணிஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, குருணால் பாண்டியா, தீபக் சாஹர், ‌ஷர்துல் தாக்கூர், புவ்னேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சஹால், சூர்யகுமார் யாதவ்.

எம்.எஸ்.கே. பிரசாத் தேர்வு செய்த அணிகள்:

டெஸ்ட் அணி: ரோஹித் ஷர்மா, மயங்க் அகர்வால், புஜாரா, விராட் கோஹ்லி(அணித்தலைவர்), ரஹானே, விஹாரி, விரிதமன் சஹா, ஜடேஜா, அஷ்வின், இஷாந்த் ஷர்மா, பும்ரா, ‌ மொஹமட் ‌ஷமி

20 ஓவர்: கே.எல்.ராகுல் (அணித்தலைவர்), தவான், ஷிரேயாஸ் ஐயர், மணிஷ் பாண்டே, ரி‌ஷாப் பாண்ட், ஹர்திக் பாண்டியா, குருணால் பாண்டியா, தீபக் சஹார், புவ்னேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சஹால், நவ்தீப் சைனி

அகர்கர் தேர்வு செய்த அணிகள்:

டெஸ்ட் அணி: பிரித்வி ஷா, மயங்க் அகர்வால், புஜாரா, கோஹ்லி(அணித்தலைவர்), ரஹானே, விஹாரி, ரி‌ஷாப் பாண்ட், அஷ்வின், உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, ‌ஷமி, ஷுப்மன் கில்.

20 ஓவர் அணி: ரோஹித் ஷர்மா (அணித்தலைவர்), கே.எல். ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், மணிஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, புவ்னேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், நவ்தீப் சைனி, சாஹல், பும்ரா, ‌ஷர்துல் தாகூர்.