23 உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவடைவதாக உள்ளூராட்சிமன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா கூறியுள்ளார். 

மேலும் ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.

ஏற்கனவே இந்த உள்ளூராட்சி மன்றங்களின் காலம் கடந்த ஜனவரி மாதம் முதல் ஆறுமாதங்களுக்கு நீடிக்கப்பட்டிருந்தமையால்  குறித்த 23 உள்ளூராட்சி மன்றங்களினதும் உத்தியோகபூர்வ காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவடைகின்றது. 

இவற்றுள் 05 பிரதேச சபைகள், ஒரு நகர சபை மற்றும் 17 மாநகர சபைகளும் உள்ளடங்குகின்றன.