ஐ.பி.எல். இருபதுக்கு 20 தொடரை வெளிநாட்டில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை (பி.சி.சி.ஐ) தரப்பிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா தாக்கத்தால், ஐ.பி.எல். போட்டி ஆரம்பமாகும் திகதி இதுவரை தீர்மானிக்கப்படவில்லை. இந்நிலையில் ஐ.பி.எல். போட்டியை வெளிநாட்டில் நடத்த திட்டமிட்டுள்ளதாக பி.சி.சி.ஐ. வட்டாரங்கள் தெரிவிப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பி.சி.சி.ஐ. தரப்பில் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுவிட்டதாகவும், தற்போது வெளிநாட்டில் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும், இதுவே கடைசி வாய்ப்பு எனவும் கூறப்பட்டுள்ளது.
அத்துடன், வெளிநாட்டில் ஐ.பி.எல். நடப்பது ஒன்றும் புதிதல்ல எனவும், ஏற்கனவே 2009 ஆம் தென் ஆப்பிரிக்காவிலும், 2014 ஆம் ஆண்டின் சில போட்டிகள் ஐக்கிய அரபு இராச்சியத்திலும் நடத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனினும், முடிந்தவரை இந்தியாவில் ஐ.பி.எல். போட்டிகளை நடத்த முன்னுரிமை தரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஐ.பி.எல் போட்டியை இலங்கையில் நடத்த இலங்கை கிரிக்கெட் சபையும், ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடத்த ஐக்கிய அரபு இராச்சிய கிரிக்கெட் சபையும் விருப்பம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM