(இரா. செல்வராஜா)

வங்காள விரிகுடாவில்  அந்தமான் தீவுக்கு அருகில் தாழமுக்க பிரதேசம் ஒன்று உருவாகி  வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கிறது. இந்த தாழமுக்க பிரதேசம் எதிர்வரும் புதன் கிழமை தாழமுக்கமாக உருவெடுக்கும் என வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார்.

கடந்த மாதம் அந்தமான் தீவுக்கு அருகில் தாழமுக்க பிரதேசமாக உருவாகி, தாழமுக்கமாக மாறி, பின்னர் சூறாவளியாக மாறியதாகவும் அவர் தெரிவித்தார். தற்போது வானிலை குறித்து வளிமண்டலவியல் அதிகாரி தகவல் தருகையில்,

தென்மேல் பருவ பெயர்ச்சி காலம் ஆரம்பித்துள்ளதால் இன்னும் ஒரு தினங்களுக்கு நாட்டில் மழையுடனான  காலநிலையே நிலவ கூடும். இடியுடன் கூடிய மழை பெய்யும்வேளைகளில்  கடற் காற்றின் வேகம் 70 தொடக்கம்  80 கிலோமீற்றர்  வேகத்தில்  காணப்படும். இதனால் கடல் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும் மீனவர்கள், கடற்சார் தொழிலாளர்கள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் என்றார்.