7 மாவட்டங்களுக்கான வாக்குச்சீட்டுக்கள் அச்சிடும் பணிகள்  நிறைவடையும் நிலை

Published By: Digital Desk 3

08 Jun, 2020 | 04:39 PM
image

பொதுத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டுக்களை அச்சிடும் பணிகள் தொடர்ந்து இடம்பெறுவதுடன் , ஏழு மாவட்டங்களுக்கான வாக்குச்சீட்டுக்களை அச்சிடும் நடவடிக்கைகள், முடிவடையும் நிலையில் உள்ளதாக,  அரச அச்சக ஆணையாளர், கங்கானி கல்பணா லியனகே தெரிவித்தார்.

வாக்குச்சீட்டுக்கள் அச்சிடும் பணி நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் செய்தி தொடர்பாக, கருத்து தெரிவிக்கையிலேயே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.

வாக்குச்சீட்டுக்கள் அச்சிடும் பணி நிறுத்தப்பட்டிருப்பதகாக , சமூக வலைத்தளங்களில், செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

அந்த செய்திகளில் எந்தவித உண்மையும் இல்லை.

வாக்குச்சீட்டுக்களை அச்சிடும் நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

அதன் பிரகாரம் பொதுத் தேர்தலுக்கான, 7 மாவட்டங்களுக்கான வாக்குச்சீட்டுக்கள், தற்போது  அச்சிடப்படுகின்றன.

அதில் இரண்டு மாவட்டங்களுக்கான வாக்குச்சீட்டுக்கள் அச்சிட்டு முடிவடைந்திருக்கின்றன.

 தேர்தலுக்கு தேவையான இதர பத்திரங்களை அச்சிடும் நடவடிக்கைகள் முடிவடைந்திருக்கின்றன.

தேர்தல் இடம்பெறும் திகதியை குறிப்பிட்டு, அச்சிடவேண்டிய பத்திரம் மாத்திரமே, தற்போது அச்சிடவேண்டி இருக்கின்றது.

அச்சிட்டு முடிக்கப்படும் மாவட்டங்களுக்கான வாக்குச்சீட்டுக்களை உரிய முறையில், தயார் படுத்திய பின்னரே தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கையளிக்க நடவடிக்கை எடுப்போம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:31:22
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள்...

2024-04-20 10:26:06
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12