சுயாதீனமான முறையில் தேர்தல் இடம்பெறுமா  என்ற சந்தேகம் தற்போது எழுந்தள்ளது என  பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி. எல். பீறிஸ் தெரிவித்தார்.

பொதுத்தேர்தலை நடத்துவதற்கான திகதி அறிவித்தலுக்கும்   வேட்பாளர்களுக்கு விருப்பு இலக்கம்  வெளியிடுவதற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. 

பொதுத்தேர்தலை நடத்துவதற்கு   முன்னெடுக்கும் செயற்பாடுகளில் ஆணைக்குழு  மந்தகரமாகவே  உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பொதுத்தேர்தலை விரைவாக நடத்த தற்போது எவ்வித தடைகளும் கிடையாது.   தேர்தலை நடத்துவதற்கு எதிராக எதிர்தரப்பினர் முன்னெடுத்த நடவடிக்கைகள் அனைத்தும் தற்போது தோல்வியடைந்துள்ளன. தேர்தலை    விரைவாக நடத்த வேண்டும் என்ற நோக்கம் தேர்தல் ஆணைக்குழுவிடன் உள்ளதா என்ற சந்தேகம் உள்ளது என்றார்.