பாவனைக்குதவாத கிழங்கு, வெங்காயத்துடன் இருவர் கைது 

By T. Saranya

07 Jun, 2020 | 08:49 PM
image

திருகோணமலை  அக்போபுர பகுதியில் பாவனைக்கு உதவாத கிழங்கு மற்றும் வெங்காயம் என்பவற்றுடன் இரண்டு பேரை கைது செய்துள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தம்புள்ள பகுதியிலிருந்து லொறி ஒன்றில் கொண்டுவரப்பட்ட வெங்காயம் 2,000 கிலோகிராம் மற்றும் கிழங்கு போன்றவற்றை சோதனையிட்டபோது அவை பாவனைக்கு உதவாத பொருட்கள் என கண்டறியப்பட்டது.

இதனையடுத்து இவர்கள் இருவரையும் நேற்றிரவு(6.06.2020) கைது செய்துள்ளதாகவும்  பொது சுகாதார பரிசோதகரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்கள் தொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கைது செய்துள்ளதாகவும் அக்போபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் கிண்ணியா பகுதியைச் சேர்ந்த 40 மற்றும் 45 வயதுடையவர்கள் என தெரியவருகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை கந்தளாய் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் அக்போபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதை தனியார்மயப்படுத்தல் என...

2022-12-08 16:33:06
news-image

ஜனாதிபதி விரும்பினால் அமைச்சரவையில் மாற்றம் -...

2022-12-08 16:30:49
news-image

கூட்டணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டார் வேலுகுமார் -...

2022-12-08 22:00:49
news-image

பாடசாலை விடுமுறை குறித்த விசேட அறிவிப்பு 

2022-12-08 21:38:21
news-image

தமிழ் அரசியல் கைதிகளை ஒரே தடவையில்...

2022-12-08 15:23:26
news-image

அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்துவது சிறந்த...

2022-12-08 14:58:05
news-image

ஊழல் மோசடி முடிவுக்கு வரும் வரை...

2022-12-08 18:39:48
news-image

அரசியலமைப்பு பேரவைக்கான உறுப்பினர்கள் தெரிவு பெரும்பான்மை...

2022-12-08 18:41:55
news-image

பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவை கலைத்துவிட வேண்டும் -...

2022-12-08 13:39:41
news-image

6 கோடி ரூபா பெறுமதியான தேங்காய்...

2022-12-08 18:38:26
news-image

2023 ஆம் ஆண்டுக்கான வரவு -...

2022-12-08 19:04:07
news-image

மக்களுக்கு கஷ்டமாக இருந்தாலும் மின் கட்டணத்தை...

2022-12-08 18:17:53