முகக்கவசங்கள் தொடர்பான வழிகாட்டல்களை மாற்றும் உலக சுகாதார நிறுவனம்

Published By: Priyatharshan

07 Jun, 2020 | 06:29 PM
image

சமூக இடைவெளி சாத்தியமில்லாத பகுதிகளில் முகக்கவசங்களை அணியுமாறு புதிதாக வெளியிட்டுள்ள முகக்கவச பயன்பாடு தொடர்பான  வழிகாட்டல்களில் உலக சுகாதார நிறுவனம் ஆலோசனை கூறியிருக்கிறது. 

சுகாதார நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் ரெட்ரோஸ்  அதானம் கெபிரியேசஸ் ஜெனீவாவில் வெள்ளியன்று செய்தியாளர்கள் மகாநாட்டில் இதை அறிவித்தார்."சமூகத்தொற்று உள்ள பகுதிகளில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களும் கொவிட் -- 19 வைரஸ் எளிதில் தொற்றக்கூடிய உடல் நிலையைக் கொண்டவர்களும் பௌாதீக இடைவெளி சாத்தியமில்லாத சூழ்நிலைகளில் முகக்கவசங்களை கட்டாயம் அணியவேண்டும்" என்று அவர் கூறினார்.
   

புதிய வழிகாட்டல்கள் வெளிவரும் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டவை என்றும் சர்வதேச நிபுணர்களுடனும் சிவில் சமூக குழுக்களுடனும் விரிவான கலந்தாலோசனைகளுக்குப் பிறகே அவை தயாரிக்கப்பட்டன என்றும் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.
   

என்.95 முகக்கவசங்கள் அல்லது அதேபோன்ற சுவாச இயக்கிகள் அல்லது முகக்கவசங்களின் பயன்பாடு வைரஸ் தொற்று ஆபத்தை பெருபளவுக்கு குறைத்திருப்பதாக 16 நாடுகளிலும் உலக சுகாதார நிறுவனத்தினால் நிதயுதவியளிக்கப்படுகின்ற6 கண்டங்களிலும் மேற்கொள்ளப்பட்ட 172 அவதானிப்பு ஆய்வுகள் மீளாய்வு மூலம் கண்டறியப்பட்டு நான்கு நாட்களுக்குப் பிறகு புதிய வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன.
   

கொவிட் --19 வைரஸ் அதன் தொற்றுக்கு இலக்கான ஒருவரின் சுவாச நீர்மங்களின் ( Respiratory droplets ) ஊடாக பரவுகின்றது என்று அறியப்பட்டிருக்கிறது.தொற்றுக்குள்ளான நபரில் இருந்து நெருக்கமான தொடர்பில் ( ஒரு மீட்டர் அல்லது அதற்கும் குறைவான ) இருப்பவர்கள் தொற்றுக்குள்ளாகக்கூடிய பெரும் ஆபத்தைக் கொண்டிருக்கிறார்கள் என்று ஆய்வுகள் காண்பிக்கின்றன.
   

ஏற்பட்டிருக்கும் மாற்றம் என்ன?
     

வைரஸ் பரவலைத் தடுப்பதில் முகக்கவசங்களின் பயனுடைத்தன்மை குறித்து உலக சுகாதார நிறுவனம் முன்னதாக கூடுதலான அளவுக்கு ஒரு நடுத்தரமான நிலைப்பாட்டையே எடுத்திருந்தது." வீடுகளில்  ஆரோக்கியமான உடல்நிலையில் இருப்பவர்கள் அல்லது சுகவீனமுற்ற ஒருவருடன் தொடர்பில் இருப்பவர்கள் அல்லது பெருமளிவ் மக்கள் கலந்துகொள்ளும் கூட்டங்களில் பங்கேற்பவர்கள் மருத்துவ முகக்கவசத்தை அணிவது ஒரு தடுப்பு நடவடிக்கை என்ற வகையில் பயன்தருவதாக இருக்கலாம் என்பதற்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவு சான்றுகளே இருக்கின்றன " என்று ஏப்ரில் 6 வெளியான  வழிகாட்டல்கள் கூறின.
   

மருத்துவ முகக்கவசங்களின் பயன்பாடு ஒரு தவறான அல்லது போலியான  பாதுகாப்பு உணர்வை உருவாக்கக்கூடும் என்பதுடன் ஏனைய தடுப்பு நடவடிக்கைகளை அலட்சியப்படுத்தப்படுவதற்கும் வழிவகுக்கக்கூடும் எனறும் அந்த வழிகாட்டல் அறிக்கை மேலும் சுட்டிக்காட்டியது.உலக சுகாதார நிறுவனம் சுகாதாரப்பராமரிப்பு பணியாளர்கள் முகக்கவசங்களை அணியவேண்டியது கட்டாயம் என்று விதந்துரைத்த அதேவேளை, ஆரோக்கியமான உடல்நிலையில் இருப்பவர்களுக்கு  முகக்கவசப் பயன்பாடு குறித்து வழங்கப்படக்கூடிய எந்தவொரு அறிவுறுத்தலுக்கும் பகுத்தறிவுக்கு பொருத்தமான காரணமொன்றை தெளிவாக முன்வைக்கவேண்டும் என்று தீர்மானங்களை மேற்கொள்பவர்களுக்கு ஆலோசனை வழங்கியது.
   

புதிய வழிகாட்டல்களில் உலக சுகாதார நிறுவனம் கடைகள், அலுவலகங்கள், சமூக ஒன்றுகூடல்கள், பாடசாலைகள் மற்றும் வணக்கத்தலங்கள் போன்ற பொது இடங்களில் அல்லது ஒரளவு பொது சுற்றுப்புறத்தில் எவரும் மருத்துவம் சாரா முகக்கவசங்களை அணிவதை அங்கீகரித்திருக்கிறது.உயர்ந்த சனத்தொகை அடர்த்தி கொண்ட அல்லது  பொதுப்போக்குவரத்து போன்ற பௌதீக இடைவெளியைப் பேணுவது கஷ்டமாகவுள்ள சூழமைவுகளிலும் இதே நடைமுறை பின்பற்றப்படவேண்டும்.
     

பௌதீக இடைவெளியைப் பேணுவது கஷ்டமாகவுள்ள சூழமைவுகளில் 60 வயதில் உள்ளவர்களும் அவர்களை விட மூத்தவர்களும் மருத்துவ முகக்கவசங்களை அணிவது மேலும் முக்கியமானதாகும்.ஆரோக்கியமான உடல்நிலையில் உள்ள மக்கள் முகக்கவசங்களை பயன்படுத்துவது தொற்றுக்கு இலக்காகக்கூடிய ஆபத்தையும்  களங்கப்படுத்தப்படுவதற்கான வாய்ப்பையும் குறைக்கிறது.
 

அணியவேண்டிய கவசங்களின் வகைகள்

மருத்துவ முகக்கவசங்கள் ( Medical masks ) , மருத்துவம்சாரா முகக்கவசங்கள் ( Non -- medical masks) என்று இரு வகையான கவசங்கள் பற்றி உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டல்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.மருத்துவ முகக்கவசங்கள் சுகாதாரப்பராமரிப்பு பணியாளர்களுக்காகவும் வைரஸ் தொற்றுக்கு இலக்காகக்கூடிய ஆட்களுக்காகவும் ஒதுக்கப்படவேண்டும் என்று சுகாதார நிறுவனம் கூறுகிறது.இந்த முகக்கவசங்கள் சர்வதேச மற்றும் தேசிய தராதரங்களின் பிரகாரம் உறுதிப்படுத்தப்படவேண்டியவை என்பதுடன் சுவாசிக்கக்கூடியதாக இருக்கும்போது 95 சதவீதமான நீர்மங்களை தடுக்கவும் வேண்டும்.
   

மருத்துவம் சாரா முகக்கவசங்கள் பல்வேறு துணிவகைகளில் தயாரிக்கப்படுகின்றன.இந்த முகக்கவசங்களுக்கான துணிவகைகள் நீர்மத்துளிகளை வடிகட்டுவதை அல்லது அவற்றை தடுப்பதை அடிப்படையாகக்கொண்டும் சுவாசத்துக்கு வசதியானவையாகவும் இருக்கவேண்டும் என்று  வழிகாட்டல்கள் கூறுகின்றன. அத்துடன் நெகிழ்வாற்றலுடைய துணிவகைகள் தவிர்க்கப்படவேண்டும்.ஏனென்றால், அத்தகைய  துணிவகைகளின் நுண்துளைகளின் அளவு அதிகரிக்கும்பாது அதன் வடிகட்டும் ஆற்றல் குறைந்துவிடு்ம்.
   

" பயன்படுத்தப்படுகின்ற துணிவகைகளைப் பொறுத்து மருத்துவம் சாரா முகக்கவசங்களுக்கு குறைந்தபட்சம் மூன்று அடுக்குகள் அவசியமாகும்" என்று வழிகாட்டல்கள் கூறுகின்றன.

( த பிறின்ற் )

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். பல்கலைக்கழகத்தில் உலக சுற்றுலா தினநிகழ்வுகள் 

2023-09-26 17:30:26
news-image

எதிர்கால இயற்கை பாதுகாப்பை சிதைக்கும் அபிவிருத்தி...

2023-09-26 15:00:53
news-image

இத்தாலியின் வெளியேற்றத்தால் தகர்ந்து போகும் சீனாவின்...

2023-09-26 11:09:20
news-image

இணையத்தை வேகமெடுக்க வைக்கும் எலனின் திட்டத்திற்காக...

2023-09-25 21:57:42
news-image

நீதிக்கான மன்றாட்டமும்  வாயால் வடை சுடுதலும்

2023-09-25 12:30:48
news-image

மேற்கு ஆபிரிக்காவில் சூழும் போர் மேகம்...

2023-09-25 11:43:22
news-image

பசும்பால் விற்க இடையூறு : மதுபானசாலைகளுக்கு...

2023-09-25 11:02:40
news-image

மறுக்க முடி­யாத உரிமை

2023-09-24 19:45:52
news-image

ஜனா­தி­ப­தியின் அதிகப் பிர­சங்­கித்­தனம்

2023-09-24 19:46:10
news-image

தனி வழி செல்­வ­தற்கு கள­ம­மைக்கும் பஷில்

2023-09-24 19:46:51
news-image

பாதிக்கப்பட்ட மக்களுக்கான ஒத்துழைப்பை வலியுறுத்தும் ஆசிய...

2023-09-24 19:47:49
news-image

ஊழியர் சேமலாப நிதிய அங்கத்தவர்களின் பண ...

2023-09-24 19:48:27