அரசாங்கத்துடன் ஒரு போதும் இணைந்து ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியமைக்காது : அகில விராஜ்

Published By: Digital Desk 8

07 Jun, 2020 | 05:10 PM
image

(செ.தேன்மொழி)

ஐக்கிய தேசியக் கட்சி ஒரு போதும் அரசாங்கத்துடன் இணைந்து தேசிய அரசாங்கம் அமைக்காது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ்காரியவசம் தெரிவித்தார்.

ஐ.தே.க. அரசாங்கத்துடன் இணைந்து தேசிய அரசாங்கம் அமைத்து செயற்படபோவதாக எதிர்தரப்பில் பலரும் தெரிவித்து வருகின்ற நிலையில் இது தொடர்பில் அவரிடம் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறியதாவது,

ஐக்கிய தேசியக் கட்சி எதிர்வரும் பொதுத்தேர்தலை வெற்றிக் கொண்டு தனித்து ஆட்சி அமைப்பதற்கே தயாராகி வருகின்றது. இவ்வாறான நிலையில் நாங்கள் அரசாங்கத்துடன் இணைந்து தேசிய அரசாங்கம் அமைக்கப் போவதாக கூறப்படும் கருத்துகள் உண்மைக்கு புறம்பானவை . நாங்கள் ஒரு போதும் அவ்வாறான தீர்மானம் எடுத்ததில்லை.

கட்சி தலைவர் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் பொதுத் தேர்தலுக்காக தயாராகி வருகின்றனர். கொரோனா வைரஸ் நெருக்கடிக்கு மத்தியில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் எதிர்கட்சி என்ற வகையில் அவர்களது செயற்பாடு திருப்திகரமாக இருக்கும் போது ஆதரிப்பதுடன் , அவ்வாறு இல்லாவிட்டால் அவர்களுக்கு எதிராக விமர்சனங்களையும் தெரிவிப்போம்.

இந்நிலையில் அரசாங்கத்தின் நன்மை தரும் ஒரு செயற்பாட்டுக்கு நாம் ஆதரவளித்தால் , அரசாங்கத்துடன் சேர்ந்து செயற்படுவதாக அர்த்தமில்லை என்றும் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு...

2025-11-08 12:45:56
news-image

மஹிந்தானந்த, நளின் பெர்னாண்டோவின் பிணை மனு...

2025-11-08 10:49:17
news-image

போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!

2025-11-08 10:33:10
news-image

யாழில் பெண் தலைவர்களை வலுப்படுத்துவது தொடர்பில்...

2025-11-08 10:22:56
news-image

இன்றைய தங்க விலை நிலைவரம் !

2025-11-08 11:29:02
news-image

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ;...

2025-11-08 10:20:33
news-image

விபத்தில் சிக்கி சிறுவன் உயிரிழப்பு!

2025-11-08 09:49:31
news-image

பெருமளவிலான ஹெரோயின் போதைப்பொருளுடன் மூவர் கைது

2025-11-08 09:49:12
news-image

இருவேறு வீதி விபத்துக்களில் இருவர் பலி!

2025-11-08 09:37:30
news-image

காலி - ஜாகொட்டுவெல்ல கடற்கரையில் அடையாளம்...

2025-11-08 08:56:17
news-image

துங்கல்பிட்டியவில் சட்டவிரோத பீடி இலைகள் மற்றும்...

2025-11-08 08:55:50
news-image

நீர்கொழும்பு ஏத்துகல கடல் நீரோட்டத்தில் சிக்கியவர்...

2025-11-08 08:47:45