இலங்கையில் இன்றையதினம் மேலும் 50 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அதன்படி இலங்கையில் இதுவரை 941 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்துள்ளனர். இவர்களில் 488 கடற்படையினரும் குணமடைந்துள்ளனர்.

இதேவேளை, இலங்கையில் 1,814 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் 862 பேர் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர்.

அத்துடன் 46 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் உள்ளனர்.

இந்நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான 11 பேர் உயிரிழந்துள்ளனர்