பதுளையில் இன்று காலை வீதி விபத்தொன்றில் 3 பேர் காயமடைந்த நிலையில், ஒருவர் மிகவும் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வேகக் கட்டுப்பாட்டினை இழந்த லொறியொன்று, முச்சக்கரவண்டித் தரிப்பிடத்திலிருந்த மூன்று முச்சக்கரவண்டிகளை மோதித்தள்ளியுள்ளது.

இந்த சம்பவத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ள நிலையில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

குறித்த சம்பவம் பதுளை, பசறை நகரில் இன்று காலை (7-6-2020) 9 மணியளவில், இடம்பெற்றுள்ளது.                


விபத்த தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

விபத்துக்குள்ளாகிய மூன்று முச்சக்கரவண்டிகளில், ஒரு முச்சக்கரவண்டி பள்ளத்தில் பாய்ந்துள்ளதாகவும்,  ஏனைய இரு முச்சக்கரவண்டிகளும் வீதியோரத்தில் சேதமாகியுள்ளதாகவும், விபத்துக்குள்ளாகிய லொறி வீதியில் தடம்புரண்டுள்ளது.காயங்களுக்குள்ளான மூவரில் ஒருவர், ஆபத்தான நிலையில் பதுளை அரச வைத்தியசாலையிலும், ஏனைய இருவரும் பசறை அரச வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த மூவரில் லொறி சாரதியும் அடங்குவார்.

பசறை பொலிசார் மேற்படி விபத்து குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

லொறி சாரதியின் கவனயீனமும், லொறி வேகக்கட்டுப்பாட்டை இழந்ததுமே விபத்துக்கு காரணமென பொலிசார் தெரிவித்தனர்.