கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல நாடுகளிலும் சிக்கித் தவிக்கும் இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.



இந்நிலையில் இங்கிலாந்தில் சிக்கித்தவித்த 278 பேர் விசேட விமானம் மூலம் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

ஸ்ரீலங்கன் ஏயார் லைன்ஸிற்கு சொந்தமான, விசேட விமானம் மூலம் குறித்த 278 பேரும் இங்கிலாந்திலிருந்து அழைத்துவரைப்பட்டுள்ளனர். 

இன்று அதிகாலை குறித்த விமானம், 278 இலங்கையர்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.