மினுவாங்கொடை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் நபரொருவர் பலியாகியுள்ளார். 

மினுவாங்கொடை பகுதியில் பல குற்றச்சாட்டுகளில் தேடப்பட்டு வந்த அங்குலான 'கொனாகோவில் ராஜா' என்ற சந்தேக நபரே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.

மொரட்டுவ , சொய்சாபுர பகுதியில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் சூத்திரதாரி , கிரிக்கெட் வீரர் ஒருவரின் தந்தை ஒருவர் உட்பட பலரை கொலை செய்த சம்பவங்களின் சந்தேக நபர் அங்குலான 'கொனாகோவில் ராஜா' என்பவரே பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்தார்.


மினுவாங்கொடை பகுதியில் பொலிஸாருக்கும் இறந்த நபருக்கும் இடையில் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிப் பிரயோகத்தில் அவர் உயிரிழந்தார்.