முகக்கவசம் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் வலியுறுத்தல்

Published By: Digital Desk 3

06 Jun, 2020 | 10:24 PM
image

உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) முகக்கவசங்கள்  குறித்த தனது ஆலோசனையை மாற்றியுள்ளது,  அதாவது, கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க சமூக இடைவெளிகள் சாத்தியமில்லாத பொது இடங்களில் முகக்கவசங்கள் அணிய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

வைரஸைப் பரப்பக்கூடிய நுண்ணிய எச்சில் மற்றும் சளி துளிகளைத் தடுக்கும் ஒரு தடையாக முகக்கவசம் உள்ளது என்பது சமீபத்திய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

சில நாடுகள் ஏற்கனவே பொது இடங்களில் முகக்கவசங்களை அணியுமாறு பரிந்துரைத்துள்ளன அல்லது கட்டாயப்படுத்துகின்றன.

ஆரோக்கியமான மக்கள் முகமூடி அணிய வேண்டும் என்பதற்கு உரிய ஆதாரங்கள் இல்லை என்று உலக சுகாதார ஸ்தாபனம் முன்பு தெரிவித்திருந்தது.

எவ்வாறாயினும்,  வைரஸ் பரவலாக பரவக்கூடிய மற்றும் சமூக இடைவெளி குறைந்த பொது போக்குவரத்து, கடைகள் அல்லது பிற வரையறுக்கப்பட்ட அல்லது நெரிசல் ஏற்படும் சூழல் போன்றவற்றில் முகக்கவசங்களைஅணியுமாறு அரசாங்கங்கள் பொது மக்களை ஊக்குவிக்க வேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் டெட்ரொஸ் அதானோம் (‎Tedros Adhanom)  தெரிவித்துள்ளார்.

நோய்வாய்ப்பட்ட நபர்கள் மற்றும் அவர்களை கவனித்துக்கொள்பவர்கள் மருத்துவ முகக்கவசங்கள் அணிய வேண்டும் என்று உலக சுகாதார ஸ்தாபனம் தொடர்ந்து அறிவுறுத்துகிறது.

உலகளவில், கடந்த ஆண்டு இறுதியில் கொவிட் 19 கொரோனா தொற்று பரவத் தொடங்கியதில் இருந்து, 67 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, கிட்டத்தட்ட 400,000 பேர் உயிரிழந்துள்ளனர் என  ஜோன்ஸ் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகம் புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 09:15:05
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25