‘மிளிர்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

06 Jun, 2020 | 08:30 PM
image

நடிகையும், பிக்பொஸ் பிரபலமுமான ஐஸ்வர்யா தத்தா நடிப்பில் தயாராகி இருக்கும் ‘மிளிர்’ என்ற படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது.

‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. அதனைத் தொடர்ந்து பாயும்புலி. ஆறாது சினம். சத்திரியன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கும் இவர், தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பிரபலமான பிக் பொஸ் நிகழ்ச்சியின் சீசன் 2வில் போட்டியாளராக பங்குபற்றி, இரண்டாவது இடத்தை பெற்றார்.

இவர் தற்போது அலேகா, கன்னித்தீவு, பப்ஜி, கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து அறிமுக இயக்குனர் நாகேந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘மிளிர்’ என்ற படத்தில் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். சினிமா டூர் என்டர்டெய்ன்மென்ட் என்ற நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் எஸ் சூர்யா தேவி தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கார்த்திகேயன் ஒளிப்பதிவு செய்ய, தினேஷ் அன்ரனி இசையமைத்திருக்கிறார். 

எக்ஸன் திரில்லராக தயாராகியிருக்கும் ‘மிளிர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி இயக்குனர் பா ரஞ்சித் வெளியிட்டிருக்கிறார். நடிகை ஐஸ்வர்யா தத்தாவின் எக்சன் அவதாரத்தை ரசிகர்கள் எதிர்பார்க்காததால், இணையத்தில் இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right